கோலிவுட்டை முந்திய டோலிவுட் : சினிமா தயாரிப்பில் அசத்தல்!
Page 1 of 1

இந்தியாவில்
அதிக அளவிலான சினிமாக்களை தயாரிப்பதில், டோலிவுட் (தெலுங்கு)
இரண்டாமிடத்தில் உள்ளது. முதலிடத்தில் பாலிவுட்டும் (இந்தி),
மூன்றாமிடத்தில் கோலிவுட்டும் (தமிழ்) உள்ளன. இந்திய சினிமா தொழிலை
பொறுத்தவரையில், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், பெரும் சரிவை
சந்தித்துள்ளது. 2008ம் ஆண்டில், 1,325 சினிமாக்கள் மட்டுமே
தயாரிக்கப்பட்டன. அதுவே, 2009ல், 1,288ஆக குறைந்தது. 2010ல், 1, 274
சினிமாக்களாக இருந்தது, கடந்த 2011ல், 1, 255ஆக குறைந்தது.
அதுபோல், கடந்த 2011ல், இந்தி, தமிழ், மலையாளம், மராத்தி, கன்னடம்
மற்றும் ஆங்கில மொழி படங்களின் எண்ணிக்கை, கணிசமான அளவிற்கு குறைந்தன. அதே
நேரத்தில், வங்க மொழி சினிமாக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஒரியா,
தெலுங்கு சினிமாக்களும் அதிகமாக வெளிவந்து வசூலில் சாதனை படைத்தன. வங்க
மொழியைப் பொறுத்தவரை, 122 சினிமாக்களும், ஒரிய படங்களைப் பொறுத்தவரை 30
படங்களும், அந்த ஆண்டில் வெளிவந்தன.
முன்னேறும் தெலுங்கு: கடந்த 2010ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 215 இந்தி
சினிமாக்களும், 202 தமிழ் சினிமாக்களும் தயாரிக்கப்பட்டன. தெலுங்கு
சினிமாக்களை பொறுத்தவரை, 181 சினிமாக்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. ஆனால்,
கடந்த 2011ம் ஆண்டில், தெலுங்கு திரையுலகில் ஏற்பட்ட எழுச்சியின் விளைவாக,
192 சினிமாக்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. அதுபோல், 206 சினிமாக்களை
தயாரித்த வகையில், இந்தி சினிமா உலகம் முதலிடத்திலும், 185 சினிமாக்களை
தயாரித்த தமிழ் சினிமா மூன்றாமிடத்திலும் உள்ளன. தேசிய திரைப்பட வாரியம்
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இரண்டாவது குழந்தை பிறந்ததால் நடிப்புக்கு முழுக்கு; சினிமா தயாரிப்பில் சிம்ரன்
» டோலிவுட் ஸ்ரைக்: அஜீத் பட ஷூட்டிங் ரத்து.
» அஜீத்தின் அசத்தல் ஹெலிகாப்டர் சண்டை!
» ஜிம்மில் அஜித் - அசத்தல் ரிசல்ட்
» ரொமான்டிக் மூடு வர அனுஷ்காவின் அசத்தல் ஐடியா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum