இப்போதைக்கு நோ பாலிடிக்ஸ்… ஆனா ரசிகர் மன்றம் உண்டு! – உதயநிதி
Page 1 of 1

இப்போதைக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. ஆனால் அடுத்த ஆண்டு ரசிகர் மன்றம் உண்டு, என்கிறார் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி.
மதுரையில் தனது ஒரு கல் ஒரு கண்ணாடி படம் ஓடும் தியேட்டர்களில் விசிட் அடித்த உதயநிதி, செய்தியாளர்களைச் சந்தித்தார்.
மதுரையில் திமுக உள்கட்சி பூசல் உச்சத்தில் இருக்கும் இந்த சூழலில், அவரிடம் அரசியல் குறித்தே அதிக கேள்விகளை எழுப்பினர் நிருபர்கள்.
பொறுமையாக அனைத்துக் கேள்விகளையும் கேட்டுக் கொண்ட உதயநிதி, பதில் அளிக்கையில், “என் குடும்பமும் அரசியலும் வேறல்ல. அதனால் இப்படிக் கேட்கிறீர்கள். ஆனால் எனக்கு இப்போதைக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. என்னிடம் சினிமா பற்றி மட்டுமே கேளுங்கள். அரசியல் பற்றி எதுவும் கேட்க வேண்டாம். என் தாத்தா (மு.கருணாநிதி), அப்பா (மு.க.ஸ்டாலின்) ஆகியோர் கட்சியில் இருப்பதாலும், அப்பா இளைஞரணி பொறுப்பில் இருப்பதாலும் நானும் கட்சியின் இளைஞரணிக்கு முக்கியப் பதவிக்கு வருவேன் என்று பத்திரிகைகள்தான் எழுதுகின்றன. ஆனால், கட்சியில் உழைத்தவர்கள் நிறையப் பேர் உள்ளனர். அவர்களுக்கு பொறுப்புகள் தரப்படவேண்டும்,” என்றார்.
பின்னர் அவர் கூறுகையில், “இன்னும் 5 ஆண்டுகளுக்கு சினிமா தயாரிப்பிலேயே கவனம் செலுத்துவேன். பின்னால் நடப்பதைப் பற்றி இப்போதைக்கு ஒன்றும் சொல்ல முடியாது. பொருத்தமான கதைகள் வந்தால்தான் நடிப்பேன்.
அடுத்து சொந்தமாகத் தயாரிக்கும் படத்தில்தான் நடிக்க இருக்கிறேன். நடிகர் சந்தானத்துடன் கூட்டணி தொடரும். அவருடன் காமெடி கலந்த கேரக்டரில் நடிக்கவே விருப்பம். எனக்கு அதற்கு ஏற்ற திரைக்கதைதான் சரியாக வரும்.
இங்கே மதுரையில் என் பெயரைப் போட்டு ரசிகர் மன்றம் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் இளம்புயல் என்று வேறு போட்டிருந்தார்கள். அது ஜெயம்ரவிக்கு உரிய டைட்டில். ஆனால், இதுவரை என் பெயரில் ரசிகர் மன்றம் என்று யாருக்கும் நான் அங்கீகாரம் கொடுக்கவில்லை. ஆனால், அடுத்த படத்தில் அல்லது அடுத்த ஆண்டு ரசிகர் மன்றம் குறித்து அறிவிப்பேன்,” என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரசிகர் மன்றம் ஆரம்பிக்கிறார் உதயநிதி!
» இலியானாவுக்கும் ரசிகர் மன்றம் வந்தாச்சு – மதுரையில்
» நடிகர்கள் ஜெய், சத்யன் வீடுகளில் முற்றுகை: சிவாஜி ரசிகர் மன்றம் அறிவிப்பு
» மங்கையர் மன்றம்: அம்பிகாவிற்கு பதில் யுவராணி?
» தலைமை மன்றம் கண்டிப்பு: குழப்பத்தில் மதுரை அஜீத் ரசிகர்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum