இரவு 11மணிக்கு முன்னதாக டர்ட்டி பிக்சர்ஸ் படத்தை டி.வி.யில் ஒளிப்பரப்ப தடை: சோனி அதிருப்தி!
Page 1 of 1

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான டர்ட்டி பிக்சர்ஸ் படத்தை டி.வி.களில் பகல் நேரங்களில் ஒளிப்பரப்ப தடை விதித்துள்ளது. மேலும் இரவு 11மணிக்கு மேல் மட்டுமே இப்படத்தை திரையிட அனுமதி வழங்கியுள்ளது. மறைந்த தென்னிந்திய கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தியில் எடுக்கப்பட்ட படம் தி டர்ட்டி பிக்சர்ஸ். இப்படத்தில் சில்க்காக வித்யாபாலன் நடித்து இருந்தார். இப்படம் ஆரம்பிக்கும் போதே ஏகப்பட்ட பிரச்னை. அதிலும் படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து டிரைலர் மற்றும் படக்காட்சிகள் வெளியான போது பலரும் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தும் அனைத்து எதிர்ப்பையும் சமாளித்து டர்ட்டி பிக்சர்ஸ் படம் வெளியானது. சக்க போடு போட்ட இப்படம், வித்யாபாலனுக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது.
இந்நிலையில் இப்படத்தின் டி.வி. உரிமையை ரூ.8 கோடிக்கு வாங்கியிருந்த பிரபல சோனி நிறுவனம், அந்தபடத்தை நேற்று(22.04.12) பகல் 12 மணியளவிலும், இரவு 8மணியளவிலும் திரையிட திட்டமிட்டு இருந்தது. ஆனால் திடீரென மத்திய அரசு இப்படத்தை ஒளிப்பரப்ப கூடாது என்று உத்தரவிட்டது. அதாவது இப்படத்துக்கு தணிக்கை குழு யு/ஏ சான்று அளித்துள்ளது. மேலும் 59 இடங்களில் கட்டும் கொடுத்துள்ளது. எனவே குழந்தைகள் நலன் கருதி இப்படத்தை பகலில் திரையிட கூடாது என்று உத்தரவிட்டது. அப்படியே திரையிடுவதாக இருந்தால் இரவு 11மணிக்கு மேல் திரையிடலாம் என்று கூறியுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை சோனி நிறுவனத்திற்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சொன்னபடி படத்தை ஒளிப்பரப்பு செய்ய முடியாததற்கு தன்னுடைய வருத்தத்தையும் தெரிவித்து இருக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» “தி டர்ட்டி” பிக்சர்ஸ்.. வரைமுறைகளை தாண்டி நடித்திருக்கிறேன்!
» டர்ட்டி பிக்சர்ஸ் படம் எனக்கு வேண்டாம் நயன்தாரா!
» தமிழில் டர்ட்டி பிக்சர்ஸ் ரீ-மேக்! சில்க்காக அனுஷ்கா…!
» ஹாங்காங் திரைப்பட விழாவில் 'டர்ட்டி பிக்சர்ஸ்' நாயகி!
» டர்ட்டி பிக்சர்ஸ்’ வித்யா பாலனின் ‘ஹாட்’ படங்கள் வெளியீடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum