தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மைடியர் குட்டி சாத்தான் புகழ் அப்பச்சன் மரணம்!

Go down

மைடியர் குட்டி சாத்தான் புகழ் அப்பச்சன் மரணம்! Empty மைடியர் குட்டி சாத்தான் புகழ் அப்பச்சன் மரணம்!

Post  ishwarya Thu Apr 04, 2013 1:16 pm

புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த பிரபல மலையாள டைரக்டரும், தயாரிப்பாளருமான அப்பச்சன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88. 1924ம் ஆண்டு கேரள மாநிலம் ஆலப்புழாவில் பிறந்தவர் அப்பச்சன். சினிமா மீதுள்ள ஆர்வத்தில் சினிமா துறைக்கு வந்த அப்பச்சன், மலையாளத்தில் பல்வேறு படங்களை இயக்கியும், தயாரித்தும் இருக்கிறார். அதுமட்டும் அல்ல இந்தியாவின் முதல் 3டி படமான மைடியர் குட்டி சாத்தான் படத்தை இவர் தான் தயாரித்தார். மலையாளம், தமிழ், இந்தி என்று பல்வேறு மொழிகளில் வெளியான இப்படம் அன்றைய சூழலில் வசூலிலும் சாதனை படைத்தது. மேலும் மலையாள திரையுலகில் சினிமாஸ்கோப், 70 எம்.எம். போன்ற புதிய தொழில்நுட்பங்களை புகுத்தியவரும் இவர் தான். மலையாள சினிமாவில் புதுமுகங்களையும் துணிச்சலுடன் தனது படங்களில் அறிமுகப்படுத்தி அவர்களை ஸ்டார் ஆக்கிய பெருமை இவருக்கு உண்டு.

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அப்பச்சன் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார். இந்நிலையில் அவருடைய உடல்நிலை நேற்று மோசமடைந்தது. தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். அப்பச்சனுக்கு மனைவியும், இரு மகன்கள் மற்றும் இரு மகள்களும் உள்ளனர்.

மறைந்த அப்பச்சனுக்கு மலையாள திரையுலகினர் பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum