போதை மருந்து வியாபாரிக்கு நூதன தண்டனை
Page 1 of 1
போதை மருந்து வியாபாரிக்கு நூதன தண்டனை
போதை மருந்து விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களுக்கு ஜெயில், அபராதம் போன்ற தண்டனைகள் அளிக்கப்படுவது வழக்கம். ஆனால், இங்கிலாந்தில், கிளவுஸ் செஸ்டர் ஷயர் பகுதியைச் சேர்ந்த போதை மருந்து வியாபாரி டெர்ரி பென்னெட் (வயது 32)க்கு அளிக்கப்பட்ட தண்டனை என்ன தெரியுமா? ‘போதை மருந்தால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் சமுதாய சீரழிவு’ என்பது குறித்து 5 ஆயிரம் வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டும் என்பது ஆகும். முதலில் அவருக்கு 1 வருடம் சிறை தண்டனையும், தண்டனை காலத்தில் 240 மணி நேரம் அவர் செய்யும் வேலைக்கு கூலி கிடையாது என்பதும் ஆகும். ஆனால், அவர் வேலை செய்ய முடியாத அளவுக்கு தோள் பட்டையில் கடுமையான காயம் ஏற்பட்டு இருந்ததால், அந்த தண்டனைக்கு பதில் கட்டுரை எழுதும் தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நூதன தண்டனையை அளித்தவர் பிரிஸ்டல் கிரவுன் நகர கோர்ட்டு நீதிபதி ஜூலியன் லாம்பெர்ட். கைதி டெர்ரி பென்னட் கட்டுரை எழுதி, சிறை நன்னடத்தை அதிகாரியிடம் கொடுக்க வேண்டும் என்பது நீதிபதியின் உத்தரவு.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» போதை மருந்து வியாபாரிக்கு நூதன தண்டனை
» போதை மருந்து வியாபாரிக்கு நூதன தண்டனை
» போதை மருந்து கும்பலுடன் தொடர்பா? – த்ரிஷா மறுப்பு
» நடிகர் நடிகைகளுக்கு போதை மருந்து சப்ளை செய்த சாய்ரா பானு!
» தலிபான்களுக்கு பணம் வழங்கிய துருக்கி பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை! ருத்திரகுமாரனுக்கு என்ன தண்டனை?
» போதை மருந்து வியாபாரிக்கு நூதன தண்டனை
» போதை மருந்து கும்பலுடன் தொடர்பா? – த்ரிஷா மறுப்பு
» நடிகர் நடிகைகளுக்கு போதை மருந்து சப்ளை செய்த சாய்ரா பானு!
» தலிபான்களுக்கு பணம் வழங்கிய துருக்கி பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை! ருத்திரகுமாரனுக்கு என்ன தண்டனை?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum