தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் வருகிறார் நந்திதா தாஸ்…!

Go down

மீண்டும் வருகிறார் நந்திதா தாஸ்…! Empty மீண்டும் வருகிறார் நந்திதா தாஸ்…!

Post  ishwarya Thu Apr 04, 2013 12:56 pm

அழகி, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களில் நடித்த நடிகை நந்திதா தாஸ் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். சீனு ராமசாமி இயக்கும் நீர்ப்பறவை படத்தில் தான் நந்திதா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். கடைசியாக கடந்த ஆண்டு, ஐ யம் என்ற படத்தில் நடித்த நந்திதா, கிட்டத்தட்ட ஓராண்டு இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் நடிக்கவுள்ளார்.

இதுகுறித்து நந்திதா தாஸ் கூறுகையில், எனக்கு குழந்தை பிறந்த பிறகு இப்போது மீண்டும் சினிமாவில் ஆர்வம் காட்ட தொடங்கிவிட்டேன். தற்போது நான், இரண்டு படத்தில் நடிக்க இருக்கிறேன். ஒன்று சீனு ராமசாமி இயக்கும் நீர்ப்பறவை. மற்றொன்று இந்தியில் புதியவர் இயக்கும் படம் ஒன்று. இதில் நீர்பறவை படம் மீனவர்கள் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியில் உருவாகும் படம் மாவொயிஸ்ட்களால் பாதிக்கப்பட்ட மக்களின் கதை. இரண்டு படமும் ரொம்ப அருமையான கதை. இதுதவிர இன்னொரு இந்தி படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இரண்டு பட சூட்டிங்கிலும் பங்கேற்க ஆர்வமாய் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum