நடிகர் சங்கத்தின் அடுத்த ‘தல’ யார்?… ஜூன் மாதம் தேர்தல்!
Page 1 of 1

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்ய ஜூன் மாதம் தேர்தல் நடத்தப் போகிறார்கள். இதற்கான முடிவை நேற்று நடந்த செயற்குழுக் கூட்டத்தில் நடிகர் சங்கம் எடுத்துள்ளது.
ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகர், நடிகைகளை உள்ளடக்கியதாக தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளது. மற்ற மாநிலங்களில் தனித் தனியாக நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என இருந்தாலும் கூட சென்னையில் உள்ள சங்கங்கள் மட்டும் இன்னும் தமிழ்மயமாகாமல் உள்ளன. தொடர்ந்து தென்னிந்திய என்ற பெயரிலேயே இவர்கள் இயங்கி வருகிறார்கள்.
நடிகர் சங்கத்தில் தென் மாநிலங்களைச் சேர்ந்த நடிகர் நடிகைகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த நாடக நடிகர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 1700 ஆகும்.
இந்த சங்கத்தின் தலைவர் பதவியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி கணேசன், புரட்சி நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ராதாரவி உள்ளிட்ட பலரும் தலைவர்களாக இருந்துள்ளனர். சிவாஜி கணேசன் மிகுந்த மன வேதனையுடன் தலைவர் பதவியிலி்ருந்து விலகிய வரலாறும் உண்டு.
விஜயகாந்த் நடிகர் சங்கத்தின் தலைவராக பதவி வகித்த காலத்தில்தான் சங்கம் பட்ட கடனை முழுமையாக அடைத்து மீண்டனர். அத்தனை நடிகர்களும் சேர்ந்து கைக் காசைப் போட்டிருந்தாலே கடனை அடைத்திருக்கலாம். இருப்பினும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி மக்களிடமிருந்து பணம் வசூலித்து தங்களது சங்கக் கடனை அடைத்த பெருமைக்குரியது நடிகர் சங்கம்.
தற்போது நடிகர் சங்கத்தின் தலைவராக 2வது முறையாக பதவி வகித்து வருகிறார் சரத்குமார். இவர் 2006ம் ஆண்டு முதல் முறையாக தலைவர் பதவியில் அமர்ந்தார். பின்னர் தேர்தல் நடத்தாமலேயே இவர் உள்ளிட்ட நிர்வாகிகள் 2வது முறையாக பதவியில் நீடித்து வருகின்றனர்.
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவது நடிகர் சங்கத்தின் வழக்கமாகும். இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் செயற்குழுவைக் கூட்டினர். அதில், சங்கத் தேர்தலை ஜூன் மாதம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
தற்போதைய நிர்வாகிகளான தலைவர் சரத்குமார், துணைத் தலைவர்கள் மனோரமா, விஜயக்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் மீண்டும் போட்டியிடுவார்களா அல்லது விலகிக் கொண்டு புதிய நடிகர்களுக்கு வழி கொடுப்பார்களா என்பது தெரியவில்லை.
எப்படி இருப்பினும் அதிமுக அரசிடமிருந்து எதையாவது கேட்டுப் பெற அக்கட்சியுடன் நெருக்கமான ஒருவரையே தலைவராகத் தேர்ந்தெடுக்க நடிகர் சங்கம் முயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சரத்குமாருக்கே மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று கருதப்படுகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஜூன் மாதம் திரும்ப வருவேன்: மனீஷா கொய்ராலா
» நடிகர் சங்கத்தின் திடீர் ரோஷம்
» நடிகர் சங்கத்தின் திடீர் ரோஷம்
» ‘சிங்கம்-2’ படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடக்கம்: சொந்த ஊரில் டைரக்டர் ஹரி பேட்டி
» அவன் இவன் அடுத்த மாதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum