17 ஆண்டுகள்… பல சீரியல்கள்… ஒரு சேனல்! – அபிநயா கிரியேஷன்ஸ் ஜேகேயின் அனுபவங்கள்
Page 1 of 1

சின்னத்திரை உலகில் பல வெற்றித் தொடர்களைத் தயாரித்து, தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்திருக்கும் அபிநயா கிரியேஷன்ஸ் நிறுவனத்துக்கு, இந்த ஆண்டு முக்கியமான ஆண்டு. பதினாறு ஆண்டுகளைக் கடந்து பதினேழாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது இந்த நிறுவனம்.
அந்நிறுவன ஆக்கத் தலைவர் மற்றும் கதையாசிரியர் ஜே.கே. தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்…
பதினேழாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறீர்கள்? எப்படி உணர்கிறீர்கள்?
நல்ல கதை இருந்தால் வெற்றி பெறுவோம், அதே போல நண்பர்களாக இணைந்து ஒரு பிராஜக்ட் செய்யும் போது. பலருடைய ஒத்துழைப்பும் நமக்கு கிடைக்கிறது. எந்த ஒரு தொழிலிலும் அதிகாரம் செய்ய கூடாது. நட்புதான் சாதிக்கும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.
உங்கள் அபிநயா கிரியேஷன்ஸ் எத்தனை தொடர்கள் தயாரித்திருக்கிறது?
1996 ஆம் ஆண்டு மே 7-ம் தேதி எங்களது முதல் தயாரிப்பாக கோவை அனுராதாவின் ‘காஸ்ட்லி மாப்பிள்ளை’ என்கிற முதல் தொடர் ஒளிபரப்பானது. அதிலிருந்து தொடர்ச்சியாக ‘மாண்புமிகு மாமியார்’, ‘மகாராணி செங்கமலம்’, ‘கிரீன் சிக்னல்’, ‘செல்லம்மா’, ‘மங்கள அட்சதை’, ‘கேள்வியின் நாயகனே’, ‘என் பெயர் ரங்க நாயகி’ என வாராந்திர தொடர்களாக எட்டு தயாரித்தோம்.
2002 மே மாதம் ‘மங்கல்யம்’ என்ற முதல் மெகா தொடரை எடுத்தோம். அது 330 எபிசோட்கள் ஒளிபரப்பானது, அதையடுத்து ‘ஆடுகிறான் கண்ணன்’, ‘தீர்க்க சுமங்கலி’, ‘செல்லமடி நீ எனக்கு’, ‘திருப்பாவை’, ‘அனுபல்லவி’, இப்போது ஒளிபரப்பாகி வரும் ‘வெள்ளைதாமரை’ என தொடர்கிறது.
எனக்கு ஒவ்வொரு தொடரிலும் ஒவ்வொரு அனுபவம். காஸ்ட்லி மாப்பிள்ளை தொடரைப் பொருத்தவரை அது காமெடி தொடர்தான். இருந்தாலும் ஒவ்வொரு வரியிலும் ஒரு மெஸேஜ் இருக்கும். இந்தியாவில் பீப்பில்ஸ் மீட்டர் என்று மக்கள் ரசனை அறியும் ஒன்று இருக்கிறது. அதன் கணக்குப் படி இந்தியாவிலேயே அந்த சீரியல் கடைசி வரை நம்பர் ஒன் சீரியலாகவே இருந்தது.
ஒரு தொடர் வரதட்சனை கொடுமையை மையப்படுத்தியது, மற்றொன்று தீண்டாமையைப் பற்றி, மாமியார் மருமகள் சண்டை ஏன் உருவாகிறது என்பதையும், புரிதல் இல்லாமையே இப்படிப்பட்ட கருத்து வேறுபாடுகள் ஏற்படக் காரணம் என்பைதையும் இன்னொரு தொடர் சொன்னது. குடும்ப உறவுகளை மதிக்க வேண்டும், வெறுக்க கூடாது என்பது போன்ற உணர்வுகளை ஒரு தொடர் சொன்னது.
கணவன் மனைவிக்குள்ள இருக்கும் மெல்லிய காதலை சொன்னது மகாராணி செங்கமலம், ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க வேண்டும் என்பதை மையப்படுத்திச் சொன்னது கீரின் சிக்னல், கணவன் மனைவிக்குள்ள ரகசியங்கள் கூடாது என்பதை சொன்னது மங்கள அட்சதை. இப்படி எங்களுடைய ஒவ்வொரு தொடரிலும் ஒரு வித்தியாசமான நல்ல கதை இருக்கும், கண்டிப்பாக மக்களுக்கு நல்ல மெஸெஜ் இருக்கும்.
உங்கள் தொடர்களுக்கான கதையை எங்கிருந்து எடுக்கிறீர்கள்? நீண்ட நாட்கள் சொல்வது போரடிக்காதா?
மக்களிடம் இருந்ததுதான்! நான் பார்க்கும் மனிதர்கள்தான் என் கதைகளுக்கு விதைகள். சந்திக்கும் ஒவ்வொரு மனிதனையும் மனதில் பதிவு செய்து கொள்வேன். உங்களை பார்க்கும் போது உங்களிடம் உள்ள நல்ல விஷயங்களைக் கிரகித்துக் கொள்வேன். புது விஷயங்களைப் பார்க்கும் போதும், கேட்கும் போதும் இப்படி இருந்தால் இது நல்லா இருந்திருக்குமேன்னு நினைக்கிறோமே அந்த உணர்வின் வெளிப்பாடுதான் என் கதைகள். நாங்கள் தொடர்களை நீண்ட நாட்களுக்கு இழுப்பதில்லை. சுவாரஸ்யம் குறையாமல் தருகிறோம்.
கிட்டதட்ட 17 வருடங்களாக ஒரே சேனலில் உங்கள் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? எப்படி சாத்தியமாச்சு?
ஒரு விஷயத்தை ஒழுங்காகச் செய்தால் எங்கேயுமே ஒழுங்கா இருக்கலாம். சொல்ல வந்ததை நேர்த்தியுடன் சொன்னால் எல்லாம் சாத்தியமே. சன் டிவியைப் பொருத்தவரை எல்லோருக்கும் கருத்துச் சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள். அதைச் சரியாக பயன்படுத்துறேன். ரசிகர்கள் மனநிலை புரிந்து அவர்களுக்கு இதுதான் வேணும் என்று நான் பிக்ஸ் பண்ணிக்குவேன். அதனால டிஆர்பியில எந்த பாதிப்பும் ஏற்படாது. சேனலும் எங்களை உற்சாகப்படுத்தறாங்க.
உங்கள் தொடர்களின் டைட்டில் சாங் ஒவ்வொன்றும் நல்ல வரவேற்புப் பெறுவதன் காரணம் என்ன?
அதற்குக் காரணம் ஒவ்வொரு பாடலிலும் கிளாசிக்கல் டச் இருக்கும். அதனாலதான் என் பாடல்கள் வெற்றி பெறுகிறது. அதுதான் ஒவ்வொருவரையும் முணுமுணுக்கச் செய்கிறது.
ஸ்டுடியோக்களுக்கு உள்ளே இருந்த தொடர்களை அவுட்டோருக்கு கொண்டு போனவர் நீங்கள். அந்த அனுபவம் பற்றி?
ஐந்தாறு தொடர்களுக்குப் பிறகுதான், நான் அவுட்டோர் போனேன். என்னை அறியாமல் எனக்கு அங்கு ஒரு செல்வாக்கு இருந்தது. அதற்குக் காரணம் சன் டிவி. ஏனென்றால் என்னுடைய தொடர்கள் எல்லாம் ஆடியன்ஸ்க்கு நல்லா ரீச் ஆகி அபிநயா கிரியேஷன்சை தங்களுடைய வீட்டுக் கம்பெனி போல மக்கள் பாவிக்க ஆரம்பித்தார்கள். அதை நான் கண் கூடாகப் பார்த்தேன்.
கொடைக்கானலில் ஒரு முறை சூட்டிங் போனோம். சூட்டிங் எடுக்க அனுமதியே கிடைக்கல. ஒருத்தர் என்ன தொடர் என்று கேட்க, கம்பெனி பேரைச் சொல்லி, தொடரின் பேர், தீர்க்க சுமங்கலி என்று சொன்னதும், உடனே, “தீர்க்க சுமங்கலியா? சூப்பர் கதையாச்சசே?. நீங்க தாராளமா சூட்டிங் எடுத்துக்கோங்க”ன்னு சொன்னாங்க. ரொம்ப குஷியாகிடுச்சு. அதேபோல ஆடுகிறான் கண்ணன் தொடருக்காக டெல்லி போய் ஸாங் சூட் பண்ணினோம். அதன் பிறகு கும்பகோணம், தஞ்சாவூர், திருவையாறு, திருவாரூர், மும்பை, ஊட்டி, கோத்தகிரி, கொடைக்கானல் என பல இடங்களில் எடுத்திருக்கோம். எல்லா இடங்களிலும் நல்ல மரியாதையும் ஒத்துழைப்பும் கிடைத்தது. அதெல்லாம் மறக்க முடியாத அனுபவங்கள்.
முன்பு தொலைக்காட்சித் தொடர்கள் எடுத்தற்கும், இப்போதைய காலகட்டத்திற்கும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. எப்படி உணர்கிறீர்கள்?
டெக்னாலஜி முன்னேற்றம்தான். அதாவது திரைப்படங்கள் மாதிரிதான். 1948-ல் சினிமா வந்ததற்கும் பிறகு 60-ல் வந்ததற்கும் இருந்த மாற்றத்தைப் போலத்தான். அடுத்து 80-களில் ஒரு மாற்றம், 90-ல் ஒரு மாற்றம். இப்போது ஒரு மாற்றம். இப்படி ரசிகர்களின் ரசனை, காலத்திற்கு ஏற்ப மாறிக்கிட்டே இருக்கிறது. அதற்கு ஏற்றாற் போல் நாங்களும் மாற்றிக் கொள்கிறோம். ஒரு நேரத்தில் சினிமாகாரர்கள் டிவியினாலதான் எங்களுக்கு நஷ்டம்னு சொன்னாங்க, ஆனால் இன்றைய சூழ்நிலையில் டிவியினாலதான் அவர்கள் படமே ஓடுதுன்னு சொல்றாங்க. அதுதான் சின்னத்திரை.
உங்கள் தொடர்களில் பணிபுரிந்த பல டெக்னீஷியன்கள் அடுத்த லெவலுக்கு உயர்ந்து இருக்கிறார்கள். அதை எப்படி பார்க்குறீங்க?
எல்லாம் அவுங்க திறமைதான். சமுத்திரகனி அபிநயா கிரியேஷன்ஸில் தொடர் இயக்கினார். பிறகு நாடோடிகள் படத்தை இயக்கி பேரும் புகழும் பெற்றார். இப்பவும் அடுத்தடுத்த படங்களில் பிஸியா இருக்கிறார். மாங்கல்யம், ஆடுகிறான் கண்ணன் தொடர்களை இயக்கிய பத்ரி, வீராப்பு, தம்பிக்கு இந்த ஊரு போன்ற படங்களை இயக்கினார். தொடர்ந்து பட இயக்குநராகவும் வசனகர்த்தாகவும் இயங்கிகிட்டு இருக்கார். வசனகர்த்தா பாலு இப்போ படத்துக்கு வசனம் எழுதுறாரு. ஒளிப்பதிவாளர் சித்திரைசெல்வன் இப்போது சினிமாவுக்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஆக்ரா என்கிற ஒரு படத்தையும் இயக்கினார். இப்போது தயாரிப்பில் இறங்கி இரண்டு படம் தயாரித்துள்ளார். தீர்க்க சுமங்கலி தொடரை இயக்கிய ப்ரியன், ஐவர் என்கிற படத்தை இயக்கினார். அதே போல மதில் மேல் பூனை என்ற படத்தை இயக்கி இருக்கும் ஆனந்த், எங்களிடமிருந்து போனவர்தான்.
எனது தொடர்களுக்கு இசையமைத்த சத்யா, எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் திரை இசையமைப்பாளராக அறிமுகமானார். என்னுடைய மக்கள் தொடர்பாளர் பாலன், ஒத்தவீடு என்கிற படத்தை இயக்கியுள்ளார். இப்படி இங்கிருந்து போனவர்கள் எல்லாமே பெரிய திரையில் நல்ல இடத்தில்தான் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை கடவுளை குறை சொல்லக்கூடாது, அதிர்ஷடத்தை குறை சொல்லக்கூடாது. உழைப்பை மட்டுமே நம்ப வேண்டும்.
இத்தனை இயக்குனர்களை உருவாக்கிய நீங்கள் ஏன் பெரிய திரைக்குப் போகவில்லை?
எதைச் செய்தாலும் அதை திருந்தச் செய்ய வேண்டும் என்று நான் நினைப்பேன். எல்லாவற்றிலும் கால் வைப்பது எனக்கு பிடிக்காது. அதுதான் காரணம். கிடைத்த இடத்தில் சிறப்பாக செய்வதைக் கற்றுக்கொண்டவன்.
எங்களுடைய நிறுவனத்தில் ஆரம்ப காலம் முதல் இப்போதும் பல டென்னீசியன்கள் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு வேறு இடம் என எதுவும் கிடையாது. கலை இயக்குநர் அசோகன், காஸ்டியூமர் பழனிவேலன், லைட் பாய்ஸ், எடிட்டர் என என்னை நம்பி பல பேர் இங்கு பல வருடங்களாக பர்மனன்ட்டாக என் கூடவே இருக்கிறார்கள். அவர்களோடு கலந்தாலோசித்துதான் வேலைகளைச் செய்கிறேன்.
எங்கள் நிறுவனத்தின் முதல் ஹீரோ வேணு அரவிந்த, அதே போல அபிஷேக் இருவரும் ஆரம்ப காலம் முதல் எங்கள் நண்பர்கள். இவர்கள் இயக்குநராகவும் தங்களை வெளிப்படுத்திக் கொண்டவர்கள். ஸ்ரீமன், காயத்திரி ப்ரியா, யுவஸ்ரீ என பலர் எங்கள் அபிநயாவில் இருந்து வந்தவர்கள்தான்.
இப்போது ஒளிபரப்பாகி வரும் வெள்ளைத்தாமரை தொடர் பற்றி?
வெள்ளைத்தாமரை மிக நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. ஒரு சஸ்பென்ஸை வைத்தால் அதற்கு உடனே விடை கொடுத்துவிடுவோம். அதனால ரசிகர்களை நன்கு கவர்ந்து வருகிறது. ஒவ்வொரு எபிசோடும் பொழுதுபோக்காகவும் இருக்கணும், அதே சமயத்தில் நல்ல மெஸேஜும் கொடுக்கணும், அதைவிட்டுவிட்டு குடம் குடமாய் அழுகையைக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை.
இந்த பதினேழு வருட அனுபவங்களை எப்படி பார்க்கிறீர்கள்?
இன்னும் எதையும் சரியா செய்யலையேனுதான் தோணுது. இன்னும் நல்லா செய்யணும்னு உத்வேகத்தை கொடுக்குது. மக்களுக்கு ரீச்சாகிற நேரத்துக்கு கொண்டு போகணும். இப்போ இருக்கிற மின்வெட்டு சரியாகணும். எங்களுடைய திறமை குடத்தில் இட்ட விளக்கு போலதான் இன்னும் இருக்கிறது. வெள்ளைத்தாமரை போன்ற கதைகள் கண்டிப்பா மக்களுக்கு போய்ச் சேரணும். மின் வெட்டு காரணமா அது மக்களை போய் சரியா சேரலங்கிற வருத்தம் இருக்கு. டிவி சீரியலுக்கு மெயின் வில்லனே மின்வெட்டுதான் இப்போ. அது எல்லாம் மாறணும் அப்போதான் எங்களுக்கு நிஜமான வெற்றி. அதே போல அடுத்தவுங்க இடத்தை பிடிக்கணும் என்கிற என்னமெல்லாம் எனக்குள் வந்தது கிடையாது. எல்லாமே நம்ம படைப்புதான் மாற்றங்களை உருவாக்கனும் என நினைப்பேன்….!”

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நாடகம் படம்மூலம் 17வது ஆண்டில் பெரிய திரையிலும் அடியெடுத்து வைக்கிறது அபிநயா கிரியேஷன்ஸ்!
» கௌதம் மேனன் படத்தில் ஜெய்யுடன் அபிநயா?!
» இளையதளபதி சேனல் உதயமாகிறது!
» கறார் கவுண்டமணி… கடுப்பில் சேனல்!
» அமீரை அசத்திய அபிநயா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum