தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கார்த்திகாவா…! அப்படின்னா யாரு…? ஹன்சிகா!!

Go down

கார்த்திகாவா…! அப்படின்னா யாரு…? ஹன்சிகா!! Empty கார்த்திகாவா…! அப்படின்னா யாரு…? ஹன்சிகா!!

Post  ishwarya Thu Apr 04, 2013 11:52 am

1980களில் தமிழில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ராதா. இப்போது தனது மகள் கார்த்திகாவையும் ஹீரோயினாக்கியுள்ளார். கோ படம் மூலம் தமிழில் அறிமுகமான கார்த்திகா இப்போது பாரதிராஜாவின், அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர சுந்தர்.சி, விஷாலை வைத்து இயக்க இருக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார். முன்னதாக இப்படத்தில் நடிக்க ஹன்சிகா தான் பேசப்பட்டார். ஆனால் ஏனோ தெரியவில்லை டைரக்டர் அவரை நீக்கிவிட்டு கார்த்திகாவை ஒப்பந்தம் செய்துவிட்டார். இதனால் ஹன்சிகாவுக்கும், கார்த்திகாவுக்கும் இடை‌யே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை ஹன்சிகா மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, கார்த்திகாவுடன் மோதலா, அவர் யார் என்றே எனக்கு தெரியாது. அவருடன் தகராறு என்பது பற்றிய செய்தி வெறும் வதந்திதான். சினிமாவில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனி இடம் உண்டு. யாரும், யாருடைய வாய்ப்பையும் தட்டி பறிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum