தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கவர்ச்சி கண்ணோட்டத்துடன் அணுக வேண்டாம் : பார்வதி ஓமணக்குட்டன்!

Go down

கவர்ச்சி கண்ணோட்டத்துடன் அணுக வேண்டாம் : பார்வதி ஓமணக்குட்டன்! Empty கவர்ச்சி கண்ணோட்டத்துடன் அணுக வேண்டாம் : பார்வதி ஓமணக்குட்டன்!

Post  ishwarya Thu Apr 04, 2013 11:34 am

கவர்ச்சியாக நடிப்பேன் என்ற கண்ணோட்டத்துடன் யாரும் என்னை அணுக வேண்டாம் என்று கண்டிஷன் போடுகிறார் நடிகை பார்வதி ஓமணக்குட்டன். 2008ம் ஆண்டு உலக அழகி போட்டியில் 2ம் இடம் பெற்றவர் பார்வதி ஓமணக்குட்டன். இவர் இப்போது தமிழ் சினிமாவில் அஜித்தின் பில்லா-2 மூலம் ஹீரோயினாக களம் இறங்கி இருக்கிறார். இப்படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பார்வதி ஓமணக்குட்டன் கூறியிருப்பதாவது, பில்லா-2 சூட்டிங்கில் அஜித்தை சந்திப்பதற்கு முன்பு அவர் ஒரு பெரிய நடிகர், அதனால் பந்தா பார்ட்டியாக இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவருடன் பழகிய பின்னர் தான் அவர் அப்படிப்பட்டவர் இல்லை என்று புரிந்து கொண்டேன். ரொம்ப எளிமையானவர், திறமைசாலி. பில்லா-2 நிச்சயமாக ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும்.

உலக அழகி போட்டியில் பங்கேற்றதால் பார்வதி ஓமணக்குட்டன் தாரளமாக கவர்ச்சி காண்பிப்பார் என்று யாரும் தவறான கண்டோட்டத்துடன் என்னை அணுக வேண்டாம். நடிப்புக்கு எந்தளவு கவர்ச்சி தேவையோ அந்தளவு கவர்ச்சி காண்பிப்பேன். என்னை பொறுத்தவரை பார்வதி சிறந்த நடிகை என்று பெயர் வாங்க வேண்டும். அதற்கு எனது நடிப்பு திறனை வெளிப்படுத்தும் விதமாக நல்ல வலுவான கேரக்டரில் நடிக்க வேண்டும். எப்படிப்பட்ட கேரக்டர் கொடுத்தாலும் அதில் அருமையாக பார்வதி நடிப்பார் என்ற பெயர் வேண்டும். அதற்காக கடுமையாக உழைப்பேன் என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum