தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடல் ஷூட்டிங்கில் குமுறி, குமுறி அழுத கார்த்திக் மகன்

Go down

கடல் ஷூட்டிங்கில் குமுறி, குமுறி அழுத கார்த்திக் மகன் Empty கடல் ஷூட்டிங்கில் குமுறி, குமுறி அழுத கார்த்திக் மகன்

Post  ishwarya Wed Apr 03, 2013 2:10 pm

மணிரத்னத்தின் கடல் பட ஹீரோ கௌதம் குமுறி, குமுறி அழுது படக்குழுவை கலங்கடித்துவிட்டாராம்.

மணிரத்னத்தின் கடல் படம் மூலம் ஹீரோவாகிறார் நவரச நாயகன் கார்த்திக் மகன் கௌதம். படப்பிடிப்பு திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு என்ற கிராமத்தில் நடந்து வருகிறது.

படத்தில் நாயகன் அனாதை ஆனாலும் ஊர் மக்களின் உள்ளங்களில் வாழ்பவன். நாயகனை எடுத்து வளர்த்த பொன்வண்ணன் ஒரு நாள் அவர் அனாதை என்ற உண்மையை உடைக்கிறார். இதைக் கேட்ட நாயகன் குமுறி, குமுறி அழ வேண்டும். காட்சியை நாயகனிடம் மணிரத்னம் விவரிக்க கௌதம் இயக்குனர் எதிர்பார்த்த மாதிரியே அழுது உருகிவிட்டாராம். இதைப் பார்த்த படக்குழுவும் கலங்கிவிட்டதாம்.

புதுமுகமாக இருந்தாலும் அவர் நடிப்பை பார்த்து அசந்த படக்குழுவினர் நாயகனை மனதாரப் பாராட்டினார்களாம். நவரச நாயகனின் மகன் அதுவும் மணிரத்னத்தின் இயக்கத்தில் என்றால் கௌதம் நடிப்பைப் பற்றி சொல்லவா வேண்டும்.

இந்த படத்தில் தெலுங்கில் நம்பர் ஒன்னாக இருக்கும் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார். அரவிந்த் சாமி இந்த படத்தின் மூலம் திரையுலகில் மறுபிரவேசம் செய்கிறார். ஆக்ஷன் கிங் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘கடல்’ படத்தில் நடிக்கும் கார்த்திக், ராதா மகன் – மகள் படங்கள்: மணிரத்னம் வெளியிட்டார்
» ஷூட்டிங்கில் அழுத சிவகார்த்திகேயன்: சமாதானப்படுத்திய இயக்குனர்
» ஒரே மேடையில் கைகோர்த்த கார்த்திக் மகன், ராதா மகள்
» ராஜபக்சேவுடன் இசையமைப்பாளர் சந்திப்பு – குமுறி அழும் கோடம்பாக்கம்!
» சுந்தரபாண்டியன் ஷூட்டிங்கில் பாலா – சசிகுமாருக்குப் பாராட்டு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum