திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் தொடங்கியது
Page 1 of 1

திருமலை: திருமலை-திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம்
இன்று தொடங்கி, வரும் 26ம்தேதி வரை நடக்கிறது. முதல் நாளான இன்று காலை 8
மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள தங்க கொடி மரத்தில் சிறப்பு பூஜைகளுடன்
கொடியேற்றப்பட்டது. இரவு 7.30 மணிக்கு ஆந்திர அரசு சார்பில் முதல்வர்
கிரண்குமார் ரெட்டி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை தேவஸ்தான தலைமை செயல்
அலுவலர் எல்.வி.சுப்பிரமணியத்திடம் வழங்குகிறார். 4ம் நாளான (21ம் தேதி)
மாலை 3 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள்
அணிந்த மாலை ஏழுமலையானுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
5ம்நாள்
(22ம்தேதி) காலை 9 மணிக்கு மோகினி அவதாரம், இரவு 8.15 மணிக்கு கருட
சேவையும் நடக்கிறது. 6ம்நாள் (23ம் தேதி) மாலை 5 மணிக்கு தங்கத்தேரிலும்,
இரவு 9 மணிக்கு யானை வாகனத்திலும், 7ம் நாள் (24ம் தேதி) காலை 9 மணிக்கு
சூர்ய பிரபை வாகனத்திலும், இரவு 9 மணிக்கு சந்திர பிரபை வாகனத்திலும்
மலையப்பசுவாமி பவனி வருகிறார். 8ம் நாள் (25ம் தேதி) காலை 7 மணிக்கு
தேரோட்டம், 9 மணிக்கு குதிரை வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப
சுவாமி மாடவீதி உலா நடக்கிறது.
நிறைவு நாளான 26ம்தேதி காலை 6
மணிக்கு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும், இரவு 7 மணிக்கு கொடியிறக்கமும்
நடக்கிறது. பிரம்மோற்சவத்தின் 9 நாட்களிலும் கோயிலில் வழக்கமாக நடைபெறும்
கல்யாண உற்சவம், வசந்த உற்சவம் உள்ளிட்ட கட்டண சேவைகள், மூத்த குடிமக்கள்,
மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஒருவயதுக்குட்பட்ட குழந்தையுடன் பெற்றோர்
செல்லும் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தினமும் 4 லட்சம் லட்டு
பிரம்மோற்சவத்திற்கு
வரும் பக்தர்கள் அனை வருக்கும் லட்டு பிரசாதம் தடையின்றி கிடைப்பதற்காக
தினந்தோறும் 4 லட்சம் லட்டுகள் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. தங்கும் அறைகள் அனைத்து பக்தர்களுக்கும் ஏற்பாடு செய்ய
முடியாத காரணத்தால் 22ம் தேதியிலிருந்து பழைய அன்னபிரசாத கூடத்தில் 116
குளியல் அறையும், 53 கழிவறைகளும் கட்டப்பட்டுள்ளது.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் தொடங்கியது

» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்
» ஏழுமலையான் கோயிலில் 15ம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum