தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிவராத்திரி 4 கால பூஜை

Go down

சிவராத்திரி 4 கால பூஜை Empty சிவராத்திரி 4 கால பூஜை

Post  gandhimathi Sat Jan 19, 2013 6:02 pm

மகா சிவராத்திரி தினத்தன்று விடிய, விடிய பூஜை, வழிபாடு, பாராயணம் செய்வதில் ஈடுபட வேண்டும். சிவராத்திரி இரவை 4 ஜாமங்களாக பிரித்து வழிபாடுகள் நடத்த வேண்டும். ஒவ்வொரு ஜாமத்திலும் அதற்குரிய வகையில் பூஜைகள் செய்து வழிபாடு செய்தால் அரச பதவிக்கு நிகரான பலன்கள் கிடைக்கும் என்று "சிவபூஜை வீதி'' என்ற நூல் விளக்குகிறது. ஒவ்வொரு காலத்திலும் எத்தகைய பூஜை, வழிபாடுகளில் ஈடுபட வேண்டும் என்ற விபரம் வருமாறு:-

முதல் கால பூஜை::

நேரம் :-இரவு 7.30 மணிமுதல் 9.30 மணி வரை
அபிஷேகம் :-பஞ்சகவ்வியம்
அலங்காரம் :-அரிசி அட்சதையிட்டு சந்தனப்பூச்சுடன் பொன்ஆபரணங்கள் அர்ச்சனை :- வில்வம், தாமரை, அலரி மலர்கள்.
ஆராதனை :-கற்பூரம்,சந்தனம், சேர்ந்த தூபம்.
நைவேத்யம் :-வில்வப்பழம், பாலன்னம்,பச்சைப் பயிறு, பொங்கல். பாராயணம் :-சிவபுராணம், தேவார, திருவாசக பாசுரங்கள்.

இரண்டாம் காலபூஜை:::

நேரம் :- இரவு 11 மணி முதல் 12.30 மணிவரை
அபிஷேகம் :-சர்க்கரை,பால்,தயிர்,நெய்,கலந்த பஞ்சாமிர்த அபிஷேகம். அலங்காரம் :-பச்சை கற்பூரம்,பன்னீர் அரைத்து சாத்துதல், துளசி மற்றும் மரகத ரத்தின ஆபரண அலங்காரம்.
அர்ச்சனை :-தாமரை, செண்பகமலர்களால் அர்ச்சனை.
ஆராதனை :-அகில் புகை காட்டி, நட்சத்திரதீபம் ஏற்றி ஆராதனை. வைவேத்யம் :-பலாப்பழம், பாயசம்,
பாராயணம் :-சிவபுராணம், தேவார, திருவாசக பாசுரங்கள்.

மூன்றாக கால பூஜை:::

நேரம் :- பின் இரவு 2.30 மணி முதல் 3.30 மணிவரை
அபிஷேகம் : தேன்
அலங்காரம் :-வெண்பட்டு அணிவித்து கோதுமை அட்சதை இட்டு மாணிக்க ஆபரணங்கள் சாத்த வேண்டும்.
அர்ச்சனை :- அருகு, வில்வம் இலைகள் மற்றும் அத்தி, பிச்சி மலர்களால் அர்ச்சனை.
ஆராதனை :- கஸ்தூரி கலந்த சந்தனம், கற்பூரம் கலந்து தூபம் மற்றும் பஞ்சமுக தீபாரதனை.
நைவேத்யம் :-எள் அன்னம், மாவும் நெய்யும் கலந்த பல காரங்கள். பாராயணம் :-சிவபுராணம், தேவார, திருவாசகபாசுரங்கள்.

நான்காம் கால பூஜை::

நேரம் :- மறுநாள் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
அபிஷேகம் :- கரும்புச்சாறு அபிஷேகம்.
அலங்காரம் :-நீலப்பட்டு அணிவித்து அரிசி, பயிறு, உளுந்து போன்றவைகளை அட்சதையாக இட்டு முத்து ஆபரணங்களை சாற்ற வேண்டும்.
அர்ச்சனை :- நந்தியா வட்டை மலர் சாத்தி, அல்லி நீலோற்பவடத்தால் அர்ச்சனை. ஆராதனை :- புனுகு சேர்ந்த சந்தனமும், குங்குமப்பூவும் கலந்த தூபம்.
நைவேத்தியம் :-சுத்த அன்னம், சர்க்கரை நெய் சேர்த்த உணவுகள், பழவகைள்.
பாராயணம் :-தேவார,திருவாசக பாசுரங்கள்

சிவ பூஜையை ஒவ்வொரு காலத்துக்கும் விமரிசையாக செய்ய வேண்டும் என்ற கண்டிப்பு அவசியம் எதுவும் இல்லை. ஒவ்வொரு வரும் தங்கள் வசதிக்கு ஏற்ப நைவேத்தியம் செய்து வழிபட்டாலே போதும். சிவாலயங்களுக்கு சென்று தேவார, திருவாசக பாசுரங்கனை மனம் உருகி பாடினால் நிச்சயம் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum