சிவபுராணம்
Page 1 of 1
சிவபுராணம்
சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந்நூலின் முதல் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது.
95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விவரித்துப் போற்றுகிறது. அத்துடன் உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகிறது.
மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப்பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் எளிதாக புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன.
முன் செய்த பாவ புண்ணியங்கள் அனைத்தும் தீர்வதற்காக உள்ளம் மகிழும் சிவபுராணத்தைக் கூறுகிறேன் என்னும் பொருள்பட, சிவபுராணம் பாடியதன் காரணத்தை அதன் 19 ஆம், 20 ஆம் அடிகளில் விளக்கியுள்ளார் மாணிக்கவாசகர்.
சைவசித்தாந்தக் கொள்கைகளின்படி, உயிர்கள் செய்யும் நன்மை, தீமை ஆகிய இரு வினைகளும் அவை மீண்டும் மீண்டும் பிறப்பதற்குக் காரணமாக அமைவதுடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கும் தடையாக அமைகின்றன. இதனாலேயே, முந்தை வினைகள் அனைத்தும் ஓய இறைவன் அருள் தேவை என்பதை எடுத்துக் கூறுகிறது சிவபுராணம்.
இதன் இறுதி அடிகளும், அல்லல் நிறைந்த பிறவியை நீக்கும் வல்லமை பெற்ற திருவடிகளைப் பணிந்து சொல்லப்பட்ட இப்பாடலைப் பொருள் உணர்ந்து சொல்லுபவர்கள் சிவபெருமானின் திருவடிகளை அடைவார்கள் என்று வலியுறுத்துகின்றன.

gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம்
» சிவபுராணம்
» சிவபுராணம்
» சிவபுராணம் அபிராமி அந்தாதி
» சிவபுராணம் அபிராமி அந்தாதி
» சிவபுராணம்
» சிவபுராணம்
» சிவபுராணம் அபிராமி அந்தாதி
» சிவபுராணம் அபிராமி அந்தாதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum