தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நள்ளிரவில் காம்னாவை துரத்திய மர்மநபர்கள்…!

Go down

நள்ளிரவில் காம்னாவை துரத்திய மர்மநபர்கள்…! Empty நள்ளிரவில் காம்னாவை துரத்திய மர்மநபர்கள்…!

Post  ishwarya Tue Apr 02, 2013 5:46 pm

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பையில், நள்ளிரவில் காரில் சென்ற நடிகை காம்னாவை சிலர் மர்மநபர்கள் துரத்தி சென்ற ‌சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் மச்சக்காரன், இதயத்திருடன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை காம்னா ஜெத்மலானி. தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். மும்பையில் வசிக்கும் காம்னா சில தினங்களுக்கு முன்னர் அந்தேரியில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்த்துவிட்டு இரவில் காரில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது அவரை மர்மநபர்கள் சிலர் காரில் பின்தொடர்ந்து வந்துள்ளனர். மேலும் காம்னா சென்ற காருக்கு அருகே சென்று ஆபாச வார்த்தைகளிலும் பேசியுள்ளனர். இதனையடுத்து பயந்து போன காம்னா காரை நிற்காமல் ஓட்டி சென்றார். இருந்தும் மர்ம நபர்கள் அவரை கிண்டல் செய்தவாறு காரில் துரத்தி வந்துள்ளனர். கிட்டத்தட்ட 40 நிமிடம் அவரை பின்தொடர்ந்து மர்மநபர்கள் வந்துள்ளனர். ஒருவழியாக அவர்களிடம் இருந்து தப்பித்து வீடு சேர்ந்துள்ளார் காம்னா. பின்னர் மர்மநபர்கள் வந்த காரின் நம்பரை குறித்துக்கொண்டு மும்பை போலீசில் புகார் கொடுத்தார். இதனையடுத்து அந்த நபர்களை ஈவ் டீசிங் வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து காம்னா கூறியுள்ளதாவது, என் வாழ்வில் இப்படியொரு சம்பவம் நடந்தது இல்லை. எனது காரை எப்டியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று அந்த நபர்கள் முயற்சித்தனர். இருந்தும் நான் தப்பித்துவிட்டேன். அந்த நேரத்தில் எனக்குள் ஏற்பட்ட பயத்தை வார்த்தைகளால் சொல்ல தெரியவில்லை. என் வாழ்வில் இப்படி ஒரு பயத்தை சந்தித்தது கிடையாது என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum