இந்தி சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான ராஜேஷ் கண்ணா மரணம்!
Page 1 of 1

இந்தி சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான ராஜேஷ் கன்னா மரணம் அடைந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மூச்சு திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் ராஜேஷ் கன்னா. இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது இதனால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உணவு கூட உட்கொள்ள முடியாத அளவுக்கு அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவருக்கு கல்லீரல் தொற்று நோய் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர் தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தும் அவரது உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லாததால் நேற்று வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று அவர் மரணம் அடைந்துவிட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
1942-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் தேதி அமிர்தசரஸில் பிறந்தவர் ராஜேஷ் கன்னா. பின்னர் 1966-ம் ஆண்டு அஹாரி காத் என்ற படம் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ராஜேஷ் கன்னா. தொடர்ந்து ஆராதனா, ராஸ், பரோன் கே சப்னா உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1960-70களில் முன்னணி கதாநாயகராக ஜொலித்த ராஜேஷ் கன்னா சில படங்களை தயாரித்தும், சில பாடல்களை பாடியும் உள்ளார். இந்தி சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்ற பெருமை இவருக்கு உண்டு. மேலும் நடிகர், தயாரிப்பாளராக மட்டும் இல்லாமல் அரசியலிலும் கால் பதித்து உள்ளார் ராஜேஷ். காங்கிரஸ் கட்சி சார்பாக பார்லிமென்ட்டில் எம்.பி.,யாகவும் இருந்துள்ளார்.
மறைந்த ராஜேஷ் கன்னா, இந்தி நடிகை டிம்பிள் கபாடியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இவர்களுக்கு டிவிங்கிள் கன்னா, ரிங்கி கன்னா என்ற இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்களும் இந்தி சினிமாவில் நடிகையாக உள்ளனர். இந்தி நடிகர் அக்ஷ்ய் குமார் ராஜேஷ் கன்னாவின் மருமகன் ஆவார்.
மறைந்த ராஜேஷ் கன்னாவின் உடல், மும்பையில் உள்ளது அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ராஜேஷ் கண்ணா மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இன்று முதல் இந்தி விண்ணைத்தாண்டி வருவாயா
» சூப்பர் ஸ்டாராக ஆசையில்லை; அவரைப் பார்க்கத்தான் ஆசை! – ‘முதல் இடம்’ விதார்த்
» தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் நினைவுநாள்: திரையுலகினர் புறக்கணித்த பரிதாபம்…!
» தமிழ் சினிமாவில் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெயரில் சிறந்த நடிகருக்கு விருது
» சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum