சிவனின் மகிமை
Page 1 of 1
சிவனின் மகிமை
இந்தியாவில் பல சிவன் கோவில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 264 கோவில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. தமிழ்நாட்டில் நிறைய சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன.
அதில் 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் என்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது மிகப் பெருமையாகும். இவைகளில் ஒவ்வொரு கோவிலுக்கும் தனிச்சிறப்பும், பழைமையும், பெருமையும் வாய்ந்தது.
மகாபாரதத்தில் வேதவியாசர் அர்ஜுனனை பார்த்து "எவன் ஒருவன் வைகறைத் துயிலெழுந்து மனத்தூய்மையோடு "ருத்ர ஜபம்" செய்கின்றானோ அவனுக்கு இவ்வுலகில் அடைய முடியாத மகிழ்ச்சி என்று எதுவும் இல்லை" என்று சொல்கிறார்.
"ஓம் நமோசிவாய" என்ற மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்தால் வாழ்வில் எல்லா துன்பங்களும் நீங்கிவிடும் என்பதுநம்பிக்கை. சிவஸ்தலத்துக்கு சிறிதளவு பணி செய்தாலும் மிகப்பெரிய பலன் கிடைப்பதை பார்க்கலாம்.
சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல பெரிய கோவில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோவில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான்.
சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை உண்டு. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும், துன்பங்களும் பாவங்கள் நீங்கும், மனம் தூய்மை அடையும்.
இவ்வுலகத்தில் பிறவி எடுத்தோர் நல்ல மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை ஆகும். சிவனே அனைத்து உலகத்த்திற்கும், எல்லா உயிர்களுக்கும் முதன்மையானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்.

gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum