தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மனைவி பிள்ளைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய சூர்யா!

Go down

மனைவி பிள்ளைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய சூர்யா! Empty மனைவி பிள்ளைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய சூர்யா!

Post  ishwarya Tue Apr 02, 2013 5:01 pm

சென்னை: மாற்றான் பட வேலைகளில் பிஸியாக இருக்கும் சூர்யா, தற்காலிகமாக அவற்றை நிறுத்திவிட்டு இன்று தன் பிறந்த நாளை மனைவி குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடினார்.
இன்றைக்கு தமிழ் சினிமாவில் வியாபார ரீதியாக சூர்யாவின் படங்கள் பெரிய விலைக்குப் போகின்றன. குறிப்பாக அடுத்து அவர் நடிப்பில் வெளிவரும் மாற்றான் படத்தின் விற்பனை விலை பலரையும் விழியுயர்த்த வைத்துள்ளது.
அஜீத், விஜய் உள்ளிட்ட அடுத்த நிலை நடிகர்களின் படங்களை விட 50 சதவீதம் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது மாற்றான்.
இந்த சந்தோஷத்தை ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளும் விதத்தில் அவர் தன் பிறந்த தினத்தைக் கொண்டாடினார்.
சூர்யா பிறந்த நாளையொட்டி ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர். தேனாம்பேட்டை எல்லையம்மன் கோவில் கல்யாண மண்டபத்தில் ரத்ததான முகாம் நடந்தது. திருவான்மியூர் எம்.எம்.ஆர். மதன் தலைமையில் 100 பேர் ரத்ததானம் செய்தார்கள்.
சூர்யா பிறந்ததின 10-வது ரத்ததான முகாமாக இது நடத்தப்பட்டது. இதுவரை 1000 பேர் வரை ரத்ததானம் அளித்துள்ளனர். ஏழைகளுக்கு அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது.
நடிகர், நடிகைகள் பலர் அவருக்கு வாழ்த்து செய்திகள் அனுப்பி இருந்தனர்.
பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து சூர்யா கூறுகையில், “கடந்த ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக ‘மாற்றான்’ ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தேன். வேறு எதிலும் கவனம் செலுத்தக் கூட நேரமில்லை. குடும்பத்தை ரொம்ப மிஸ் பண்ணிட்டேன். அதனால் பிறந்த நாளையொட்டி இன்று முழுவதும் அவர்களுடன் இருப்பேன் என்றார்.
இந்த நாளை என்னைவிட ஆர்வத்துடனும் அர்த்தமுள்ளதாகவும் கொண்டாடி வரும் என் ரசிகர்களுக்கு அன்பும் நன்றிகளும்,” என்றார் சூர்யா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum