உடல் எடையை குறைக்கும் ஸ்கிப்பிங்
Page 1 of 1
உடல் எடையை குறைக்கும் ஸ்கிப்பிங்
உடற்பயிற்சி என்பது இப்போது மிகவும் அவசியமாகி விட்டது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு தான் செல்ல வேண்டும் என்பதில்லை. தினமும் ஜாலியா 20 நிமிஷம் ஸ்கிப்பிங் செய்தாலே 100 கலோரிகள் வரை எரிக்க முடியும். செலவே இல்லாத இந்த ஸ்கிப்பிங் பயிற்சியை முறையாக எப்படிச் செய்வது?
• முதலில் ஒரு ஸ்கிப்பிங் கயிறை எடுத்து அதைத் தரையில் நீள வாக்கில் கிடத்தி, பாதி அளவு நீளம் இருக்கும் இடத்தில் கயிற்றின் மீது நின்றுகொண்டு, கயிற்றின் இருமுனைகளையும் இரு கரங்களாலும் மேல்நோக்கி உயர்த்த வேண்டும். கயிற்றின் இரு முனைகளும் உங்கள் அக்குள் பகுதிவரை இருந்தால் அந்தக் கயிறை தேர்வு செய்ய வேண்டும்.
• முதலில் நேராக நிற்க வேண்டும். பின்பு உங்களது ஸ்கிப்பிங் கயிறை உங்களது குதிக்காலின் கீழ் வைத்துக்கொள்ளவும். பின்பு மெதுவாகக் கயிறைச் சுழலவிட்டு அதன் வேகத்திற்கு ஏற்பக் கயிறைத் தாண்டித் தாண்டிக் குதிக்கவும். முதலில் மெதுவாக ஆரம்பித்து, பிறகு வேகத்தை சீராகக் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு ஸ்கிப்பிங் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
• சாதாரணமாகத் தாண்டி விளையாடுதல் தவிர்த்து, முன்புறமாகத் தாண்டுதல், பின்புறமாகத் தாண்டுதல், ஓடிக்கொண்டே தாண்டுதல், குறுக்கு வாக்கில் தாண்டுதல் எனப் பல வகைகள் உண்டு. சாதாரணமாகக் குதித்தல் தவிர மற்ற முறைகளை உரிய பயிற்சியுடன்தான் செய்ய வேண்டும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள்!
» உடல் எடையை குறைக்கும் 11 உணவுகள்!
» உடல் எடையை குறைக்கும் 11 உணவுகள்!!!
» உடல் எடையை குறைக்கும் “வெந்தயம்”.
» உடல் எடையை குறைக்கும் 11 உணவுகள்!!
» உடல் எடையை குறைக்கும் 11 உணவுகள்!
» உடல் எடையை குறைக்கும் 11 உணவுகள்!!!
» உடல் எடையை குறைக்கும் “வெந்தயம்”.
» உடல் எடையை குறைக்கும் 11 உணவுகள்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum