தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பூஜை அறையில் தீபம்

Go down

பூஜை அறையில் தீபம் Empty பூஜை அறையில் தீபம்

Post  gandhimathi Sat Jan 19, 2013 5:38 pm



தீபம் ஏற்றும் போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன் மக்களிடையே நன்மதிப்பும் கிடைக்கும்.

* மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட்டும் ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும். கடன் தொல்லைகள் விலகும்.

*சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும்.

* தென் திசையில் உள்ள முகத்தை ஒருபோதும் ஏற்றக்கூடாது. எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் கூடும்.

*சுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டதுதான் பஞ்சுத்திரி.

*முற்பிறவியின் பாவங்களை அகற்றி - செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.

*மழலைப் பேறில்லையே என ஏங்குவோர் வாழைத்தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.

*செய்வினைகள் நீங்கவும், நீடித்த ஆயுள் பெறவும் வெள்ளெருக்குப் பட்டைத் திரியில் விளக்கேற்ற வேண்டும் முழு முதற்கடவுளான கணேசப் பெருமானுக்கும் உகந்தது இது.

*தம்பதிகள் மனமொத்து வாழவும் - மகப்பேறு பெறவும் மஞ்சள் நிறங்கொண்ட புதிய திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.

*கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.

*கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும் வேப்பெண்ணை தீபம் உகந்தது.

*அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது ஆமணக்கு தீபம்.

*எள் எண்ணெய் (நல்லெண்ணை) தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது. நவக்கிரகங்களைத் திருப்தி செய்யவும் ஏற்றது.

*மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் சுத்தமான தேங்காய் எண்ணெய் கொண்டு தீபமேற்ற வேண்டும்.

*செல்வங்கள் அனைத்தையும் பெற விரும்புவோர் வேப்பெண்ணை, இலுப்பை எண்ணெய், நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.

*மந்திர சித்தி பெற வேண்டுவோர் விளக்கெண்ணை, இலுப்பை எண்ணெய், நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.

*கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை.

*ஞாயிறு எண்ணெய் தேய்த்து குளித்தால் வடிவமும் அழகும் போய்விடும்.

*திங்கள் எண்ணெய் தேய்த்து குளித்தால் அதிகப் பொருள் சேரும்.

*செவ்வாய் எண்ணெய் தேய்த்து குளித்தால் துன்பம் வரும்.

புதன் எண்ணெய் தேய்த்து குளித்தால் மிக புத்தி வந்திடும்.

*வியாழன் எண்ணெய் தேய்த்து குளித்தால் உயரறிவு போய்விடும்.

*வெள்ளி எண்ணெய் தேய்த்து குளித்தால் செல்வம் மிகும்.

*சனி எண்ணெய் தேய்த்து குளித்தால் ஆயுள் அதிகமாகும்.

* மேற்கண்டவையாவும் பெண்களுக்கு.

*ஆண்கள் சனி, புதன் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது

* ஆண்களுக்கு, திங்கட்க்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முடக்கு வாதம் வரும்

*செவ்வாய் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முதுகு பாலை நோய் வரும்.

*வியாழக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் கால் குடைச்சல் வரும்.

*வெள்ளிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முட வாதம் வரும். நம் முன்னோர்கள் சனியையும், புதனையும் ஏன் தேர்தெடுத்தார்கள். மற்ற செல்வங்களை விட அறிவினையும்,உடல் நலத்தினைத்தான் உயர்வாக நினைத்தார்கள்- மதித்தார்கள்.

*எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது குளிர்ந்த நீரில் குளிக்க கூடாது. வெதுவெதுப்பான சுடுநீரில்தான் குளிக்க வேண்டும்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum