கோச்சடையானும் என் எதிர்பார்ப்பும்…! – சந்தோஷத்தில் சண்முகராஜா
Page 1 of 1

விருமாண்டி வில்லன் “பேய்காமனை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். கோலிவுட்டில் பல பரிமாணத்தில் வில்லனாய் அசத்தி வரும் சண்முக ராஜா, உண்மையில் “சாப்ட் மேன். மதுரை ஓட்டல் ஒன்றில் நாம் சந்திக்க சென்ற போது, “”பேட்டி தரும் அளவிற்கு நான் இன்னும் ஹீரோ ஆகவில்லையே என, மொட்டை மாடியில் “வெஜிடபிள் சூப் ருசித்தபடி, வில்லத்தனமாய் சிரித்து, நம்மை வரவேற்றார். “”ஹீரோ சான்ஸ் தேடுகிறார் சண்முகராஜா, என எழுதிடமாட்டீங்களே… என, “கன்டிஷன் போட்டவர், நாம் “ஓகே என்றதும், பேட்டிக்கு “”ஓகே சொன்னார்.
* நாடகம்-சினிமா எப்படி தாவ முடிந்தது?
எம்.பில்., தமிழ் படித்திருந்தாலும், டில்லி தேசிய நாடக பள்ளியில் படித்த போது, கலைத்துறை தேர்வு செய்தேன். மதுரையில் நிகழ் நாடக மையத்தை துவங்கி அதில் ஈடுபாடுடன் இருந்த போது, நாசர் அறிமுகத்தில் சினிமா வாய்ப்பு கிடைத்தது.
* உலகநாயகனுடன் முதல் வாய்ப்பு எப்படி உணர்ந்தீர்கள்?
முதல் படமே கமல் உடன் என்றதும், தலை உச்சிக்கு சந்தோஷம். நாடகங்களை இயக்கியிருந்தாலும், கேமரா முன் நின்றபோது கூச்சம் இருந்தது. கமல் சார் கொடுத்த உற்சாகம், நடிக்க வைத்தது.
* நாடக நடிகர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதில்லையோ?
சிவாஜி, கமல், நாசர், பிரகாஷ்ராஜ், பசுபதி ஆகியோர், நாடக வழி வந்தவர்கள் தான். நாடகம் தான் சினிமா வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.
* கோச்சடையானில் ரஜினிக்கு நீங்கள் தான் வில்லனாமே?
அந்த ஆசை எனக்கும் இருக்கு. அதை பத்தி கேட்காதீங்க; நான் வாயே திறக்கமாட்டேன். படம் வந்ததும் பாருங்க, தெரியும்(அப்போ… அண்ணனுக்கு “வெயிட் ஆன ரோல் இருக்கு). கோச்சடையான் எனக்கு முக்கியமான படம், என் கதாபாத்திரம் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
* நீங்களும் “பொன்விழா நாயகனாமே?
60 படங்களில் நடிச்சிருக்கேன். எதையும் குறை சொல்ல முடியாது. அந்நியன், எம்-மகன், சிவாஜி, மாயாவி, கிருஷ்ணவேணி பஞ்சாலை, வேட்டை, சண்டைக்கோழி, சரித்திரம் என எல்லா படமும் ரசித்து நடித்தது தான்.
* நீங்களும் ஹீரோ ஆகலாமே?
எனக்கு அப்படி ஒரு “ஐடியாவே இல்லை. குணச்சித்திர வேடங்களை விரும்புறேன். நடிப்பிலும் கடின உழைப்பு தேவைப்படுகிறது. குணச்சித்திரங்கள், மக்கள் மனதில் முதலிடம் பிடித்த படங்கள் நிறைய உள்ளன.
* நடித்தும் வெளிவராத படங்கள் என்ற “ராசி உங்களுக்கு உண்டா?
இதுவரை அப்படி ஒரு நிலை வரவில்லை. இந்தி, தெலுங்கில் நடித்த படங்களும் வெளிவந்துள்ளன. கரிகாலன், மாப்பிள்ளை விநாயகர், வீரன்முத்துராகு படங்களில் மெயின் வில்லன் நான் தான். தவிர, பூலோகம், சவரிக்காடு படங்களில் முக்கிய கதாபாத்திரம் எனக்கு. விரைவில் இவை திரையில் தெரியும்.
* போலீஸ் உடை உங்களுக்கு மட்டும் கச்சிதம், எப்படி?
என் உடல்வாகு அதற்கு ஏற்ப உள்ளது. போலீசிலும் கெட்ட போலீஸ் தானே நான். கதைக்கு ஏற்ப எந்த காட்சியாக இருந்தாலும், “அது கற்பழிப்பாக இருந்தாலும் நடிக்க வேண்டியது நடிகனின் கடமை.
* சினிமாவிற்காக உடலை வருத்தி நடித்த நிகழ்வுகள்?
களரி, சிலம்பம், ஒயிலாட்டம், தேவராட்டம் என நம் கலைகள் பலவற்றை கதைகளுக்கேற்ப கற்றேன். இவை தவிர தாய்ச்சி, லைகரபா என வெளிநாட்டு கலைகளையும் கற்று நடித்திருக்கிறேன். இவற்றை சிரமாக கருதாமல் தேவையாக கருதி இன்னும் பல கலைகளை கற்றுவருகிறேன்.
* காமெடியன்கள் எளிதில் ஹீரோவாகி விடுகிறார்களே?
ஏதாவது சண்டையை இழுத்துவிட தான் நீங்க முயற்சிக்கிறீங்க. (தெளிவா இருக்காரே…) காமெடியன்களுக்கு ஹீரோ “ஸ்கோப் அதிகம். (இதுக்கு மேல் வாயக்கொடுத்து, வம்பில் சிக்க நான் தயார் இல்லை, என்பதை சிரிப்பில் தெரிவித்தார், வில்லன் சண்முகராஜா).

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தலைகீழ் சந்தோஷத்தில் தமன்னா
» போல் பச்சன் ஹிட்! சந்தோஷத்தில் அசின்!!
» பில்லா இல்லாத சந்தோஷத்தில் 450 அரங்குகளில் களமிறங்கும் சகுனி!!
» அப்பாவாகும் சந்தோஷத்தில் செல்வராகவன்!
» சந்தோஷத்தில் சொர்க்கம் இருக்குசொர்க்கம் இருக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum