கோவில்களில் ஏன் விக்கிரகங்களை கற்சிலைகளாக அமைக்கிறார்கள்?
Page 1 of 1
கோவில்களில் ஏன் விக்கிரகங்களை கற்சிலைகளாக அமைக்கிறார்கள்?
நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம்- இந்த பஞ்ச பூதங்களால் ஆனது தான் இந்த பிரபஞ்சம். பஞ்ச பூதங்களைப்படைத்த இறைவனை, பஞ்ச பூதங்களும் அடங்கிய கருங்கல்லினால் விக்கிரகமாக வடித்து வழிபடுகிறோம்.
நீர்: பாறைகளை உடைத்துத்தானே நீர் ஊற்றுகளை கண்டறிய முடிகிறது. மேலும் நீரின் தன்மை குளிர்ச்சி, பாறைகளில் நீரின் குணம் இருப்பதால் தான், அவை இயற்கையாக குளிர்ச்சியை வெளிப்படுத்தும்.
நிலம்: கல்லும் மண்ணும் சேர்ந்தது தானே நிலம்.
நெருப்பு: இரண்டு கற்கள் உராயும் போது, நெருப்புப் பொறிபறப்பதிலிருந்து இவைகளில் நெருப்பு அடக்கம் என்று தெரிகிறது.
காற்று: கல்லினுள் தேரையும் வசிக்கும் என்றால், காற்று இருக்க வேண்டுமல்லவா?
ஆகாயம்: பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாயம் சப்த அலைகள் நிறைந்தது.
கற்கள் சப்தங்களை எதிரொலிக்கச் செய்வதால், கருங்கல்லில் ஆகாயத் தத்துவம் அடங்கியுள்ளது. அசையாத்தன்மை கொண்ட கல்லினால் ஆன விக்கிரங்களை வழிபடும் போது `அவனின்றி அணுவும் அசையாது' என்பதை புரிந்துகொள்கிறோம்.
கோவிலில் மூலவர் விக்கிரகம் கல்லால் வடிக்கப்பட்டிருந்தாலும், உற்சவ மூர்த்தி செம்பினால் ஆனதாக இருக்கும். மின்சக்தியை ஈர்க்கவும், தக்கவைத்துக் கொள்ளவும், வெளிப்படுத்தவும், மற்ற உலோகங்களை விட செம்பு தான் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
கல்லால் விக்கிரம் அமைத்து வழிபடுவது உயர்வானது. உலோக சக்தி, மனோ சக்தி, மந்திர சக்தி, எந்திர சக்தி, ஆன்ம சக்தி இவைகளால் அது தெய்வீக சக்தி பெறுகிறது. வி + க்ரகம் - விக்ரகம், வி - விசேஷமான க்ரகம் - இருப்பிடம், இறைவன் சிறப்புடன் இயங்கும் இடம்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» கோவில்களில் ஏன் விக்கிரகங்களை கற்சிலைகளாக அமைக்கிறார்கள்?
» கோவில்களில் விக்கிரகங்களை தொட்டு கும்பிடலாமா????
» கோவில்களில் விக்கிரகங்களை தொட்டு கும்பிடலாமா????
» விக்கிரகங்களை தொட்டுக் கும்பிடலாமா?
» கோவில்களில் கடைபிடிக்க வேண்டியது...
» கோவில்களில் விக்கிரகங்களை தொட்டு கும்பிடலாமா????
» கோவில்களில் விக்கிரகங்களை தொட்டு கும்பிடலாமா????
» விக்கிரகங்களை தொட்டுக் கும்பிடலாமா?
» கோவில்களில் கடைபிடிக்க வேண்டியது...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum