சுவாமிநாத சுவாமி திருக்கோவில்
Page 1 of 1
சுவாமிநாத சுவாமி திருக்கோவில்
சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள கந்தாஸ்ரதத்தில் முருகப்பெருமான் சுவாமிநாத சுவாமியாக கோவில் கொண்டுள்ளார். இவரது விக்ரகத்தின் உயரம் 12 அடி. பழனியைப் போன்று இங்கும் முருகப்பெருமான் மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறார். வலது கையில் தண்டம் பிடித்து, இடது கையை இடுப்பில் வைத்து, வேலை வலது கை மேல் சாத்திய நிலையில் கேட்ட வரம் தரும் வள்ளலாக திகழ்கிறார்.
இவரை வணங்கினால் ஞானம், செல்வம் பெருகும் என்கிறார்கள். சூரபத்மனை வதம் செய்வதற்காக அன்னை பராசக்தியை வணங்கி, வேல் பெற்றதை நினைவுகூரும் வகையில் இந்த திருத்தலத்தில் அன்னை புவனேஸ்வரி எதிரில் பணிவுடன் காட்சி தருகிறார் முருகப்பெருமான்.
தந்தைக்கே உபதேசம் செய்ததால் ஏற்பட்ட `சுவாமிநாதன்' என்ற திருநாமத்துடன் `குருவின் குருவாக' இங்கு அருள்பாலிக்கும் முருகப்பெருமானை குருபெயர்ச்சி நாளில் வழிபடுவது சிறப்பு என்கிறார்கள்.
போக்குவரத்து வசதி...
இந்த கோவிலுக்கு செல்ல சென்னையின் அனைத்து பகுதியிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சுவாமிநாத சுவாமி திருக்கோவில்
» சுவாமி நாத சுவாமி கோயில்
» திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்
» சின்னாளப்பட்டி சதுர்முக முருகன் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் தல வரலாறும், தலைமுறை வரலாறும்
» சுவாமி நாத சுவாமி கோயில்
» சுவாமி நாத சுவாமி கோயில்
» திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்
» சின்னாளப்பட்டி சதுர்முக முருகன் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் தல வரலாறும், தலைமுறை வரலாறும்
» சுவாமி நாத சுவாமி கோயில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum