தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அன்பையும் அமைதியையும் தேடு!

Go down

அன்பையும் அமைதியையும் தேடு! Empty அன்பையும் அமைதியையும் தேடு!

Post  birundha Sat Jan 19, 2013 4:43 pm

* தூய்மையான உள்ளத்தோடு கடவுளின் பெயரை அறிக்கையிட்டு வழிபடுவோருடன் நீதி, நம்பிக்கை, அன்பு, அமைதி ஆகியவற்றை நாடித் தேடு.
* இளைஞர்கள் சோர்வுற்றுக் களைப்படைவர்; வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர். ஆண்டவர் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் புதிய ஆற்றல் பெறுவர்.
* தந்தையைக் கொடுமைப்படுத்தித் தாயைத் துரத்திவிடும் மகன், வெட்கக்கேட்டையும் இழிவையும் வருவித்துக் கொள்கிறான்.
* மனக்கவலையை ஒழியுங்கள், உடலுக்கு ஊறு வராதபடி காத்துக் கொள்ளுங்கள், குழந்தைப் பருவமும்
இளமையும் மறையக் கூடியதாகும்.
* இளைஞரே! நீங்கள் வலிமை வாய்ந்தவர்கள், கடவுளின் வார்த்தை உங்களுக்குள் நிலைத்திருக்கிறது.
* நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப் பற்றித்
தம்பட்டம் அடித்துக் கொள்ளாதீர்கள்.
* உன் சகோதரர்கள் ஏழ்மைப்பட்டு இளைத்துப் போனால், அவர்களுக்கு உதவு. அவர்கள் அன்னியர் போலும் விருந்தினர் போலும் உன்னோடு வாழட்டும்.
* ஏழைகளுக்கு இரங்கி உதவி செய்கிறவர் கடவுளுக்கு கடன் கொடுப்பவராக மாறுகிறார்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum