தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகைகள் விசயத்தில் நடிகர்களுக்கு ஈகோ தேவையில்லை- கருணாஸ்!

Go down

நடிகைகள் விசயத்தில் நடிகர்களுக்கு ஈகோ தேவையில்லை- கருணாஸ்! Empty நடிகைகள் விசயத்தில் நடிகர்களுக்கு ஈகோ தேவையில்லை- கருணாஸ்!

Post  ishwarya Mon Apr 01, 2013 2:28 pm

கருணாசுக்கு ஜோடியாக திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பாணி ஆகிய படங்களில் நடித்த இரண்டு கதாநாயகிகளையுமே அதன் பிறகு எந்த படத்திலும் காணமுடியவில்லை. இதனால் கருணாசுடன் ஜோடி சேர்ந்தால் அதன்பிறகு புதிய படங்களே கிடைக்காது என்று அவர் படங்களில் நடிக்க அழைத்தால் சில நடிகைகள் ஓட்டம் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதுபற்றி ரகளபுரம் படப்பிடிப்பில் இருந்த கருணாசை சந்தித்து கேட்டபோது, சில நொடிகள் மெளனமாக இருந்தார், பின்னர் அவரது முகத்தில் ஒருவித பீலிங்ஸ் வெளிப்பட பேசத் தொடங்கினார்…
மற்றவர்களை மாதிரி நானும் ஒரு நடிகன்தான். திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அமபாணின்னு ரெண்டு படங்கள்ள கதையின் நாயகனாக நடிச்சிருக்கேன். ரெண்டு படமுமே வெற்றிதான். இப்ப ரகளபுரம், மச்சான், சந்தமாமான்னு பல படங்கள்ள நடிச்சிட்டு வர்றேன். கதையின் நாயகனா மட்டுமில்லாம சில படங்கள்ல காமெடியனாவும் நடிக்கிறேன். கதாநாயகனாக நடிச்ச பிறகு எப்படி காமெடியனா நடிக்கிறது என்ற ஈகோவெல்லாம் எனக்குள்ள கெடையாது. என்னைப்பொறுத்தவரை எல்லா நடிப்புதான். இதுல உயர்வு தாழ்வு பாக்கிறதில்ல.
ஆனா என்ன காரணமோ என்னுடன் ஜோடியா நடிச்ச நடிகைங்களுக்கு அதுக்கு அப்புறம் யாருமே வாய்ப்பு கொடுக்கிறதில்ல. காமெடியனோட நடிச்ச நடிகைன்னு ஓரங்கட்டுறாங்க. நடிகருகங்க இதுக்கெல்லாம் ஈகோ பார்க்கிறத பார்க்கிறப்ப மனசுக்கு ரொம்ப சங்கடமா இருக்கு. அதனால இந்த சந்தர்ப்பத்த பயன்படுத்தி, நடிகைங்க விசயத்துல நடிகருங்க ஈகோ பார்க்க வேண்டுமன்னு அன்போட கேட்டுக்கிறேன்.
மேலும், இப்ப நான் நடிக்கிற படங்கள்ல ரெண்டு மூணு நடிகைங்க நடிக்கிறாங்க. அவங்க இதுக்கு அப்புறமா படம் கெடைக்குமோ கெடைக்காதோன்னு கவலைப்படல. சினிமாவுல நமக்கு எதிர்காலம் இருக்குன்னுதான் நடிக்கிறாங்க. அதைப்பார்க்கிறப்ப எனக்கு சந்தோசமா இருக்கு. நாளைங்கிறது நம்பிக்கைதானே. அதனால இப்ப என்னோட நடிக்கிற நடிகைங்களுக்கு இதுக்கு அப்புறமா சினிமாவுல நல்ல எதிர்காலம் இருக்கும்னு அவங்களைப்போலவே நானும் நம்புறேன் என்கிறார் கருணாஸ்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum