தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுப்பிரமணிய சுவாமி கோயில் - குன்றத்தூர்

Go down

சுப்பிரமணிய சுவாமி கோயில் - குன்றத்தூர் Empty சுப்பிரமணிய சுவாமி கோயில் - குன்றத்தூர்

Post  meenu Mon Apr 01, 2013 12:35 pm

மூலவர் - சுப்பிரமணியசுவாமி
தலவிருட்சம் - வில்வம்
தீர்த்தம் - சரவணபொய்கை
ஆகமம் - சிவாகமம்
பழமை - 500 வருடங்களுக்கு முன்
ஊர் - குன்றத்தூர்

84 படிகள் கொண்ட குன்றின் மீது அமைந்த கோயில் இது. இக்கோயிலில் முருகன் சன்னதிக்கு நேரே நின்று பார்த்தால், முருகன் மட்டுமே தெரிவார். வள்ளி, தெய்வானையைக் காண முடியாது. சன்னதிக்கு இடப்புறம் அல்லது வலப்புறம் நின்று பார்த்தால் முருகனை, வள்ளி அல்லது தெய்வானை ஆகிய இருவரில் ஒருவருடன் சேர்ந்திருக்கும்படிதான் தரிசிக்க முடியும். இவ்வாறு சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது.

முருகன் சன்னதி முன்புள்ள துவாரபாலகர்கள் இருவரும், முருகனைப் போலவே கையில் வஜ்ரம், சூலம் வைத்திருக்கின்றனர். சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்த விபூதியையே, பிரசாதமாக தருகின்றனர். பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் இவ்வூரில் அவதரித்தவர். இவருக்கு மலையடிவாரத்தில் தனிக்கோயில் இருக்கிறது. குன்றுடன் அமைந்த ஊர் என்பதல் இத்தலம் “குன்றத்தூர்” என்று அழைக்கப்படுகிறது.

மலைப்பாதையின் நடுவே வலஞ்சுழி விநாயகர் சன்னதி இருக்கிறது. முருகன் சன்னதி கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை இருக்கின்றனர். பிரகாரத்தில் காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, விநாயகர், பைரவர், நவக்கிரகம், நாகர் சன்னதிகள் உள்ளது. இங்குள்ள விமானம் ஷட்கோண அமைப்பில் உள்ளது. இத்தலத்தில் முருகன், வள்ளி, தெய்வானை இருவருடனும் வடக்கு நோக்கியிருக்கிறார்.

திருவிழாக்கள்.....

வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம். கந்தசஷ்டி விழா இங்கு எட்டு நாட்கள் நடக்கிறது. ஆறாம் நாளில் சூரசம்ஹாரம், ஏழாம் நாள் வள்ளி திருமணம், எட்டாம் நாளில் தெய்வானை திருமணம் நடக்கிறது.

போக்குவரத்து வசதி.....

இந்த கோவிலுக்கு செல்ல சென்னையின் அனைத்து பகுதியில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum