தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கர்ப்பவாந்தி ஏற்படக் காரணங்களும்,குறைக்கும் வழிகளும்

Go down

கர்ப்பவாந்தி ஏற்படக் காரணங்களும்,குறைக்கும் வழிகளும் Empty கர்ப்பவாந்தி ஏற்படக் காரணங்களும்,குறைக்கும் வழிகளும்

Post  amma Sun Dec 23, 2012 12:57 pm

நாள் முழுவதும் எனக்கு உடல் நலமில்லாதது போல் தோன்றக் காரணம் என்ன?

இது உங்களுக்கு மட்டும் தோன்றுவதல்ல. கர்ப்பத்தின் போது முதல் சில வாரங்களுக்கு 75 சதவிகிதத்திலிருந்து 80 சதவிகிதம் வரையிலான பெண்களுக்கு ஒருவித குமட்டல் உணர்வு இருக்கும். கர்ப்பத்தின் போது உங்கள் உடலில் பல மாற்றங்கள் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன. பெண்களுக்கான ஹார்மோன்களின் அளவு அதிகரிக்கிறது, மணம் நுகரும் தன்மை வீர்யமடைகிறது, வயிற்றில் சுரக்கும் அமிலத்தில் அளவு அதிகரிக்கிறது மற்றும் சோர்வு ஏற்படுகிறது. மன அழுத்தம் மற்றும் உணர்ச்சி மயமாவது ஆகியவை குமட்டலை மேலும் மோசமாக்குகிறது. இது எவ்வளவு நாள் நீடிக்கும்? குமட்டல் உணர்வானது சில வாரங்களிலிருந்து சில மாதங்கள் வரை நீடிக்கும். அபூர்வமாக அதிக காலம் நீடிப்பதும் உண்டு. பெரும்பாலான பெண்களுக்கு மூன்றாவது மாதத்தின் இறுதியில் இது நிற்கும். ஆனால் லேசான குமட்டல் கர்ப்ப காலம் முழுவது அவ்வப்போது வந்து போனபடி இருக்கலாம். பல சமயங்களில் இது சில வாசனைகளால் தூண்டப்படுகிறது. எதுவும் வயிற்றில் தங்காமல் அடிக்கடி வாந்தி எடுத்தபடி இருந்தால் எனக்கு என்ன ஆகும்? உங்கள் நர்சையோ அல்லது டாக்டரையோ கலந்தாலோசியுங்கள். சாப்பிட வேண்டும் என்ற எண்ணமே வரவில்லை என்றால் டாக்டரை பார்த்து ஆலோசனை பெறுங்கள். அதிகமாக வாந்தி வருகிறது என்றால் உங்கள் உடலுக்குத் தேவையான அளவு உணவு மற்றும் திரவப் பொருட்களை நீங்கள் எடுத்துக் கொள்ளவில்லை என்று அர்த்தம். இது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும். உங்களுக்குத் தேவையான உணவு அல்லது மருந்து தருவதன் மூலம் இதை டாக்டரால் நிறுத்த முடியும். உங்களை ஓய்வெடுக்கும்படியோ அல்லது சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேரும்படியோ டாக்டர் கூறலாம். குமட்டல் உணர்வு என் குழந்தையை பாதிக்குமா? நீங்கள் நன்கு சாப்பிடும் வரை மற்றும் ஏராளமான திரவ ஆகாரங்களை எடுத்துக்கொள்ளும் வரை காலையில் எழும் குமட்டல் உணர்வு உங்கள் குழந்தையை பாதிக்காது. குமட்டல் உணர்வைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்? வயிற்றை குமட்டும் உணவுகள் மற்றும் வாசனைகளை தவிர்ப்பதுடன் கீழ்கண்டவற்றையும் முயற்சி செய்து பாருங்கள்: •சாதாரண பிஸ்கட்டுகளை கைவசம் எப்போதும் வைத்திருங்கள். காலையில் எழுந்தவுடன் எதையாவது சற்று கொறிக்கவும். பின்னர் படுக்கையை விட்டு எழும்பும் முன்னர் 20 அல்லது 30 நிமிடங்களுக்கு ஓய்வெடுக்கவும். •அடிக்கடி கொஞ்சமாக சாப்பிடவும். வயிறு காலியாக இருப்பது குமட்டலை அதிகமாக்கும். •கொறிப்பதற்கு ஸ்நாக்ஸ் கைசம் வைத்திருங்கள். பிஸ்கட் போன்றவற்றை நாள் முழுவது அவ்வப்போது சாப்பிடுங்கள். •50 மி.கி. அளவுள்ள பி&6 விட்டமின் மாத்திரைகளை நாள் ஒன்றிற்கு இரு முறை எடுத்துக் கொள்ளுங்கள். இது சில பெண்களுக்கு பலனளிக்கும். ஆனால் இதை எடுத்துக் கொள்ளும் முன்னர் உங்கள் டாக்டரிடம் இது பற்றி ஆலோசனை பெறுங்கள். •கர்ப்பத்தின் போது நீங்கள் வேறு ஏதாவது உணவை அல்லது விட்டமின்களை கூடுதலாக எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் சில நாட்களுக்கு அதை நிறுத்தி வைக்கவும். இதனால் குமட்டல் குறைந்தால் மேலும் சில நாட்களுக்கு நிறுத்தி வைக்கவும். •இரும்பு சத்திற்கான மாத்திரைகளை தவிர்க்கவும் (இரத்தசோகை இருந்தால் தவிர). ஏனெனில் அவை ஜீரணமாவது கடினம். அப்படி தேவையெனில் வேறு ஏதாவது கம்பெனியின் மருந்தை எடுத்துக் கொள்ளவும். சிலருக்கு சில கம்பெனியின் மருந்துகள் மட்டுமே ஒத்துக் கொள்ளும். •உப்பு, காரம் மிகுந்த பொருட்களையும், எண்ணையில் வறுக்கப்பட்ட பொருட்களையும், அமிலம் அதிகமிருக்கும் பொருட்களையும் தவிர்க்கவும். பொதுவாகவே கொழுப்புச் சத்து குறைவான பொருட்களை உண்ணவும். •ஏராளமான திரவப் பொருட்களை எடுத்துக் கொள்ளவும். இவற்றை சாப்பிடும் போது குடிப்பதை விட இரு சாப்பாட்டிற்கு இடையில் குடிப்பது நல்லது. •இஞ்சி டீ குடிக்கவும். இஞ்சி வயிற்றுக்கு நல்லது. •நன்கு ரிலாக்ஸ் செய்யவும். ஓய்வெடுக்கவும். உங்களைப் போலவே விரைவில் அம்மாவாக ஆக இருப்பவரிடம் பேசுவது உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும்
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum