தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புதன் சாந்தி ஹோமம்

Go down

புதன் சாந்தி ஹோமம் Empty புதன் சாந்தி ஹோமம்

Post  amma Fri Jan 11, 2013 1:40 pm


புதன் ஒன்பது மற்றும் பத்தாம் இடத்தில் இருந்தால், சிறப்பாக இருக்கும். எந்த தொழிலில் இறங்கினாலும் அது சிறப்பாக இருக்கும். நல்ல வேலை அமையும். ஆனால், அதே சமயம் அந்த இடங்களில் ராகு, கேது, செவ்வாய், சனி போன்ற பாவக் கிரகங்கள் உடன் இருந்தால் பலன் சுமாராகத்தான் இருக்கும். அரசாங்க எதிர்ப்பு, உறவினர்களுடன் விரோதம், செய்யாத குற்றத்துக்குப் பழி சுமக்கும் துர்ப்பாக்கியம், சிறுநீரகப் பாதையில் நோய்கள்...

என பல பாதிப்புகள் வரும். புதன், தனது எதிரி கிரகமான சந்திரனுடன் இணைந்திருந்தாலும் பாதிப்பு தான்! புதன் பலமில்லாமல் இருந்தால் விவசாயிகளுக்குப் பயிர் விளைச்சல், கால்நடைகள் ஆகியவற்றில் நஷ்டம் உண்டாக வாய்ப்பு இருக்கிறது. மற்றவர்களுக்குக் கல்வி வாய்ப்பில் பாதிப்புகள் உண்டாகும்.

இந்த சமயங்களில் தான் புதனுக்கு சாந்தி செய்வது அவசியம். ராசிக்காரரின் ஜென்ம நட்சத்திரம், புதன்கிழமை அல்லது தேர்ந்த ஜோதிடர் ஒருவர் குறித்து தரும் ஏதாவது ஒரு சுபதினத்தில் புதனுக்கு சாந்தி செய்யலாம். புதன் திசையால் சிரமங்கள் ஏற்படும்போது, புதன்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நல்லது.

அந்த நாட்களில் பச்சைப்பயிறு தானம் செய்தால் விசேஷ பலன்கள் கிடைக்கும். புதன் பகவானின் மனைவி பெயர் ஞானதேவி. பெயர் சொல்ல ஒரு புத்திசாலியான பிள்ளை வேண்டும் என்று விழைவோர், புதன் பகவானை மனமுருகப் பிரார்த்தனை செய்தால் புத்திர தோஷம் நீங்கி தெய்வாம்சம் நிறைந்த குழந்தை பிறக்கும்.

புதனுக்குரிய மூலமந்திரம் - ஓம் புதனாய நம!

தினமும் அதிகாலையில் சுத்தமான மனநிலையில் இதை எத்தனை முறை பாராயணம் செய்தாலும் விசேஷம். கல்வி, கேள்விகளில் ஒருவரை அதிமேதாவி ஆக்கும் வல்லமை இந்த மூலமந்திரத்துக்கு உண்டு.

புதனுக்குரிய காயத்ரி மந்திரம்!

`ஓம் கஜ த்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத : ப்ரசோதயாத்!

இதை தினமும் சொல்லி வருவோருக்கு அறிவும் ஆற்றலும் ஞானமும் கிடைக்கும். 108 தடவை உச்சரிப்பது விசேஷம். நேரம் இல்லாதவர்கள் தினமும் குறைந்தது ஒன்பது முறை உச்சரித்தால் கூட போதும். ஆனால், ஆனந்த ஈடுபாட்டோடு உச்சரிப்பது முக்கியம்.

இதேபோல புதனுக்கு ஒரு ஸ்லோகமம் உள்ளது. புதனுக்கான நவக்கிரக சாந்தி செய்யும்போது இந்த ஸ்லோகத்தைச் சொல்லித்தான் சாந்தி செய்வார்கள்.

`ப்ரியங்கு கலிகா ச்யாமம் ரூபேண
அப்ரதிமம் சுபம்
ஸெளம்யம் ஸெளம்ய குளோபேதம் தம்
புதம் ப்ரணமாம்யஹம்!

சாந்தியின் போது இதை 34,000 தடவை சொல்லி வேதியர்கள் ஹோமம் செய்வார்கள். இப்படிச் செய்தால் தோஷம் நீங்கிவிடும்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum