மீனாட்சியின் `வெட்கம்'
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
மீனாட்சியின் `வெட்கம்'
மதுரையை அரசாட்சி செய்யும் அன்னை மீனாட்சி, உலகை எல்லாம் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்த பிறகு, இறைவன் சிவபெருமான் குடிகொண்டுள்ள கைலாயம் நோக்கி பெரும் படையுடன் சென்றாள். முதலில் அஷ்டதிக்கு பாலகர்களையும் வென்று, அதன்பின் சிவன் எதிரே கம்பீரமாக வந்து நிற்கிறார்.
அப்போது அவரது மூன்று தனங்களில் ஒன்று மறைய... அதன் பின்னரே எதிரே நிற்கும் சிவபெருமான் தான் தனது மணாளன் என்று அறிந்து வெட்கப்படுகிறார். சிவபெருமானும் ஓர் நல்ல நாளில் மதுரை வந்து திருமணம் செய்து கொள்வதாக உறுதியளிக்கிறார். இந்த நிகழ்வு சித்திரைத் திருவிழாவில் இடம்பெறுகிறது.
திக்விஜயம் செல்லும்போது இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய எட்டு திசை அதிபர்களையும் வெல்லும் அன்னை மீனாட்சி, சிவனின் காவலரான அதிகார நந்தியையும் வெல்கிறார். பின்னர் சுவாமியை எதிர்க்கச் செல்லும்போது, அவர் தனக்கு கணவராகப் போகிறவர் என்பதை அறிந்து வெட்கத்தால் தலை குனிகிறாள்.
அப்போது அம்பாள் இறைவனைச் சரணடைந் ததன் அடையாளமாக, அவளது சப்பரத்தின் விளக்குகளை அணைத்து விடுகிறார்கள். தொடர்ந்து, மீனாட்சி அம்மனை, சிவபெருமானாகிய சுந்தரேஸ்வரருக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயதார்த்தம் செய்கிறார்கள். இதற்கென உள்ள முறைக்காரர்கள் பெண் வீடு சார்பில் அரிசி, பருப்பு, காய்கறி, பழம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, புடவை...
என சீர் பொருட்களை கொண்டு வந்து, தங்கள் வீட்டுப் பெண்ணாக மீனாட்சி அம்மனை பாவித்து திருமணம் செய்து வைக்க சம்மதிக்கின்றனர். அப்போது சுவாமி, அம்பாள் இருவரையும் அருகருகே அமர வைத்து தீபாராதனை நடத்தப்படுகிறது. மறுநாள் திருக்கல்யாணம் நடக்கிறது. சித்திரை மாதம் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள், அவர்களது இந்த நிச்சயதார்த்த வைபவத்தையும் கண்டு தரிசிப்பது சிறப்பு.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» மீனாட்சியின் கவர்ச்சி உடையும்; பார்த்திபனின் ஏடாகூட கமெண்ட்டும்!
» ‘ஓவர் கிளாமர்’ : இனியா வெட்கம்
» ஏன் இந்த வெட்கம் - மணவாழ்க்கையில் முழு இன்பம் காண சில யோசனைகள்...
» நாம் வெட்கம் அல்லது நாணம் அடையும்போது நிகழ்வதென்ன?
» நாம் வெட்கம் அல்லது நாணம் அடையும்போது நிகழ்வதென்ன?
» ‘ஓவர் கிளாமர்’ : இனியா வெட்கம்
» ஏன் இந்த வெட்கம் - மணவாழ்க்கையில் முழு இன்பம் காண சில யோசனைகள்...
» நாம் வெட்கம் அல்லது நாணம் அடையும்போது நிகழ்வதென்ன?
» நாம் வெட்கம் அல்லது நாணம் அடையும்போது நிகழ்வதென்ன?
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum