தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தோஷம் போக்கும் திருநள்ளாறு கோயில்...

Go down

தோஷம் போக்கும் திருநள்ளாறு கோயில்... Empty தோஷம் போக்கும் திருநள்ளாறு கோயில்...

Post  birundha Sun Mar 31, 2013 3:10 pm

ஸ்தல வரலாறு....

திருநள்ளாறு கோயிலுக்கு ஒரு காலத்தில் ஆதிபுரி என்பது பெயராகும். அங்குள்ள சிவனை வழிபட்டு பிரம்மா பரிகாரம் பெற்றதாக ஸ்தலபுராண வரலாறு சொல்கிறது.பிரம்மதேவர் பூஜித்த சிவனுக்கு தர்ப்பாரண்யேஸ்வரர் `'என்பது பெயராகும்.

இங்குள்ள ஸ்தல விருட்சம் தர்ப்பை ஆகும். இங்குள்ள லிங்கம் சுயம்புவாக தோன்றியதாகும்.முசுகுந்த சக்கரவர்த்தி ஆண்ட காலத்தில் அந்த ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்துள்ளார்.

இந்த புண்ணிய ஸ்தலத்திற்கு நள விடங்கர்''நளேஸ்வரம்'என்று பற்பல பெயரும் உண்டு நள மகாராஜா கலிபுருடனின் அம்சமான சனி பகவானால் பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாகி, இறுதியில் இக்கோயிலுக்கு வந்து நளதீர்த்தத்தில் நீராடியபின் கலி நீங்கி சகல சம்பத்துகளையும் பெற்றான்.

இங்குள்ள தர்ப்பாராண்யேஸ்வரர் விக்ரகத்தின் கீழ் சனிபகவானால் எழுதி (முனிவர்களாகவும் இருக்கலாம்) பிரதிஷ்டை செய்யப்பட்ட இயந்திரமொன்று இருக்கிறது. இதுவே இந்த திருத்தலத்தின் பரிகார மகிமைக்கு காரணமாகும். கலிபுருடனாகிய சனிபகவான் நளமன்னன் முன் தோன்றி,

நீ என்னிடம் விரும்பும் வரத்தை கேட்டு பெற்றுக்கொள்வாயாக''என்று கேட்க, நளன் உனது ஆட்சி நடக்கும் காலத்தில் என் வரலாற்றைக் கேட்டாரை நீ அடையாமல் இருப்பாயாக'' என்று வேண்டினான்.இதனை நளவெண்பா ,கலி நீங்கு காண்டத்தில்,

`'உன் சரிதம் சொல்ல உல காளும் காலத்தும்
மின் சொரியும் வேலாய்!மிக விரும்பி என் சரிதம்
கேட்டாரைநீயடையேல் என்றாந்
கிளர்மணிப்பூண் வாட்டானை மன்னன் மதித்து''

என்று கூறுகிறது.எனவே சனிபகவானின் பிடியில் சிக்கியோர் அக்காலத்தில் நளமன்னனின் சரித்திரத்தை வாசிப்பது சிறந்த பரிகாரமாகும் என அக்காலம் முதல் நம் பெரியோர் சொல்லி வந்திருக்கின்றனர்.இதில் உள்ள சூட்சுமம் என்னவெனில்,இவனை விட நாம் கஷ்டப்படவில்லை என தைரியம் வரும் அளவுக்கு கஷ்டத்தை நளன் பட்டதுதான்.

சனி தனது சஞ்சாரத்தின் போது ரோகிணி சாரத்தில் நுழையும்போது உலகம் பெரும் அழிவுகளை சந்திக்கும் என்றும்,போர்,வறுமை,வெள்ளம்,பசி,பட்டினி என மக்கள் துன்புறுவர் எனவும் சொல்லப்பட்டுள்ளது. வராஹிமிரர் தனது ப்ருஹத் சம்ஹிதை நூலின் 47 வது அத்தியாயம் 14 வது சுலோகத்தில் கீழ்க்கண்டவாறு சொல்கிறார்.

''ரோஹிணி சகடமர்க்க நந்தனோயதி
பிநத்திருதிரோ(அ)தவாசிகி! கிம்வதாமியத
நிஷ்டசாகரே ஜகத் சேமுபயதி ஸ்ங்க்சயம்''

இன்னொரு பாடலில் பிரளய காலத்துக்கு ஒப்பானதொரு நிலையை உலகம் சந்திக்கும்''என்று கூறுகிறது.மேலும் இக்கருத்தை காஸ்யபர்,பிரம்மகுப்தர் ஆகியோரும் ஒப்புக்கொள்கின்றனர்.

சனி தன் தந்தை சூரியனை விடவும் பலமானவனாக மாற வேண்டும் என்பதற்காக காசியில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு அதன்படி சனீஸ்வரர் என்று பெயர் பெற்றார் என புராணம் சொல்கிறது.அதன்படி நாமும் காசி விஸ்வநாதரை வழிபட்டால் சனி தோஷத்துக்கு சிறந்த பரிகாரமாக அமையும். திருநள்ளாறு சென்று அங்குள்ள தீர்த்தங்களில் முதலில் நீராட வேண்டும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum