தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆதிமூலேஸ்வரர் கோவில் - பரங்கிப்பேட்டை

Go down

ஆதிமூலேஸ்வரர் கோவில் - பரங்கிப்பேட்டை Empty ஆதிமூலேஸ்வரர் கோவில் - பரங்கிப்பேட்டை

Post  birundha Sat Mar 30, 2013 10:01 pm

ஸ்தல வரலாறு....

மூலவர் : ஆதிமூலேஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்மன்/தாயார் : அமிர்தவல்லி
தல விருட்சம் : வில்வம், வன்னி
தீர்த்தம் : வருண தீர்த்தம்
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : வருணசேத்ரம்
ஊர் : பரங்கிப்பேட்டை
மாவட்டம் : கடலூர்

என்றும் பதினாறு வயதுடையவராக இருக்க மார்க்கண் டேயர் வரம் பெற்றது போல, என்றும் 12 வயதுடையவராக இருக்க சித்தரகுப்தர் வரம் பெற்ற தலம் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் உள்ள ஆதிமூலேஸ்வரர் தலமாகும். கைவாசி விசாகசம், திருக்கார்த்திகை, சிவராத்திரி, பங்குனி உத்திரம், மாசி மகம், தை அமாவாசை, ஐப்பசி கடைமுழுக்கு நாட்களில் இங்கு தீர்த்தவாரி உண்டு.

சிவன் கோவில்களில் பைரவருக்கு அர்த்தஜாம பூஜை செய்து நடை அடைப்பது வழக்கம். இங்கு, பைரவருக்கும், சித்திரகுப்தருக்கும் பூஜை செய்து நடை அடைக்கப்படுகிறது. அர்த்தஜாமத்தில் சித்ரகுப்தரே சிவனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். மரண பயம் நீங்கவும், ஆயுள் விருத்தி பெறவும், நோய் தீரவும் இங்கு மிருத்யுஞ்ச ஹோமம் செய்து வழிபடலாம்.

ஞானம், மோட்சம் கிடைக்க இங்குள்ள சித்ரகுப்தரை வணங்கலாம். சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்கின்றனர். சித்திரகுப்தர் சிவனருள் பெற்று, எமதர்மனின் கணக்கராக பணி பெற்ற தலம் இது. இவரது 12-ம் வயதில் உயிர் பிரியும் விதி இருந்தது.

அவரது தந்தை வசுதத்தன் வருந்தினார். அவரைத் தேற்றிய சித்ரகுப்தன், இத்தலத்து சிவனை வழிபட்டார். எமன் அவரை பிடிக்க வந்தபோது, சிவன் அம்பிகயை அனுப்பி எமனைத் தடுத்தார். அவள் எமனிடம், "சித்திரகுப்தன் சிவபக்தன். அவனை விட்டுவிடு என கட்டளையிட்டாள். எமனும் சித்திரகுப்தனை தண்டிக்காமல் விட்டதுடன், சிவனது கட்டளைப்படி தனது உதவியாளராகவும் ஏற்றுக் கொண்டார்.

சித்திரகுப்தர் என்றும் 12 வயதுடையவராக இருக்கும்படியான அருள் பெற்றார். அம்பாள் சன்னதி எதிரே சித்திரகுப்தர் சன்னதி உள்ளது. மாசி மகத்தன்று ஆதி மூலேஸ்வரர், வங்காள விரிகுடா கடலுக்குச் சென்று வருணனுக்கு விமோசனம் கொடுக்கும் வைபவம் நடக்கும்.

வருணன் மழைக்குரிய தெய்வமென்பதால், சிவனுக்கு தீபாராதனை செய்தபின், ஆகாயத்தை நோக்கி தீபாராதனை காட்டுவர். தை அமாவாசை, ஐப்பசி கடை முழுக்கு நாட்களிலும் தீர்த்தவாரி உண்டு.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum