தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மெய்கண்ட மூர்த்தி முருகன் கோவில்

Go down

மெய்கண்ட மூர்த்தி முருகன் கோவில் Empty மெய்கண்ட மூர்த்தி முருகன் கோவில்

Post  birundha Sat Mar 30, 2013 9:31 pm

ஸ்தல வரலாறு.....

அலைகடல் உரகம் நாகன்பட்டினம் என்றும் நாகைக்காரோணம் என்றும் புகழப்படுகிற நாகப்பட்டினத்தில் மிகப்பழமையான குபேரன் சன்னதி குபேர கோவில் என்று புகழ்படும் மெய்கண்ட மூர்த்தி-முருகன் கோவிலில் உள்ளது.

ஆலய வரலாறு:-

தமிழ் இலக்கிய வரலாற்றில் புகழ்பெற்று விளங்கிய அழகுமுத்து புலவர் உருவாகக் காரணமான இந்த சன்னதி பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. நாகை நகரில் நடு நாயகமாக விளங்குகிற இந்த சன்னதியின் வித்யாச வரலாற்றை அறியத்தருகிறார். கோவில் அர்ச்சகர் எஸ். வெங்கடேச சிவாச்சாரியார்.

அழக என்ற ஊமைப்பணியாள் இந்தக் கோவில் தோட்டப்பணிகளைச் செய்து கொண்டு முருகன் நிலேதன சாதத்தையே உணவாக உட்கொண்டு பக்தர்கள் கொடுக்கும் சில காசுகளை மட்டும் பெற்று காலம் தள்ளினான். ஒரு நாள் அர்த்தசாம மணி அடித்து விட்டு களைப்பு மிகுதியால் அங்கு ஒரு மறைவான இடத்தில் தூங்கிவிட்டான்.

பூஜை முடித்துவிட்ட அர்ச்சகர் சாதத்தை ஒரு பெஞ்சின் அடியில் வைத்து சொல்லிவிட்டுச் செல்ல இரவு 1 மணிக்கு விழித்தவனுக்கு பசி மிகுதியானது. வாய்பேச முடியாத அவன் பூட்டிய கோவிலுக்குள் அங்குழிங்கும் கத்தியபடியே ஓடிவந்தான்.

முருகன் தந்தான் பஞ்சாமிர்தம்:-

ஊமையன் முத்து கத்துவது முருகனுக்குக் கேட்டது. உடனே பாலன் உருவில் வந்து அவனை அமரச் செய்து பஞ்சாமிர்தத்தை கொடுத்து பசியாறச் சொன்னான். பிறகு என்னை முருகா என்று கூப்பிடு பேச வரும் என்ற போது ஊமையன் முத்து பேசினான் வாய்திறந்து...!

இந்த உலகிற்குக் கவிபாட வந்த புலவன் நீ ! புறப்படு உனக்காகவும் உன் குரலைக் கேட்க உலகமே காத்துக் கொண்டிருக்கிறது என்றான் அழகன் முருகன். என்னிடம் செய்த இறைபணி போதும் இனி இலக்கியப்பணி செய்வாய் என்று வாழ்த்தினான்.

அவ்வளவுதான் கங்கையாய்ப் பிரவாகமெடுத்தது அழகு முத்துவின் கணீர்க்குரல் ஓடினான் திருத்தலங்களுக்கு- பாடினான் அருட்பாடல்களை..! புகழ்பெற்று ஊரெல்லாம் சுற்றி வயதானபின் வைகாசி மாத விசாக நட்சத்திர நாளில் சிதம்பரம் நடராஜரின் 1000-கால் மண்டபத்தில் ஆவிபிரிந்தபின் நேராக நாகைமெய்கண்ட மூர்த்தி முருகன் சன்னதிக்கு வந்தது அழகு முத்துவின் ஆவி!

அப்போது சாயரட்சை தீப ஆராதனை நடந்து கொண்டிருந்தபோது முருகனின் அசரீரி ஒலித்தது, என் பக்தன் வருகிறான் வழிவிடுங்கள் ஐக்கியப்படுத்திக் கொள்கிறேன். என்று ஒவ்வொரு ஆண்டும் வைகாசியில் விசாக விண்மீன் நிலவும் நாளில் ஐக்கியத் திருவிழா கோலாகலமாக நடத்தப்படுகிறது.

ஆலய மூர்த்தங்கள்:-

முதலில் கொடி மரம் வடக்கு நோக்கிய இரும்பன் சன்னதி அலங்கார மண்டம் நடராஜர் சன்னதி, காசி விஸ்வநாதர், விசாலாட்சி, கன்னி விநாயகர், நவநாயகர் ராஜ, துர்க்கை, சிவசூரியன், பைரவ மூர்த்தி, குருபகவான், உச்சவர், ஸ்ரீதேவியருடன் முருகன் காட்சிதர அழகு முத்துப்புலவர் வணங்கியபடி அருகில் உள்ளார். விசாகம், கந்தசஷ்டி, கிருத்திகை, கார்த்திகை தீபம் முக்கிய விஷேச நாட்கள்.

குபேரன் சன்னதி சிறப்பு:-

நாகை முருகப்பெருமானின் அழகைக்கண்டு வியந்த இந்திரன் தனது ஐராவத-யானையைப் பரிசாகக் கொடுத்துச் சென்றதால் இத்தலத்தில் மயிலுக்கு பதிலாக யானைதான் வாகனமாக உள்ளது. மேலும் இந்த திருக்கோவிலுக்கு வந்து வலம் வருவோருக்கு குபேர சம்பத்து கிடைக்க வேண்டும் என்பதால் வடக்கு பிரகாரத்தில் குபேரப்பெருமானை பிரதிட்டை செய்ததாக ஆலயவரலாறு சொல்கிறது. தமிழ்நாட்டில் முதன் முதலாக புராண காலத்திலிருந்தே குபேரன் வழிபாடு நடைபெற்ற பழமையான கோவில் நாகை குபேர கோவில்.

தீபாவளி அன்று ஸ்வர்ண அர்ச்சனை:-

ஒவ்வொரு வருடமும் தீபாவளி தினத்தன்று மாலையில் குபேரனுக்கு விஷேச அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. முதலில் கலசம் வைத்து சன்னதி முன்பு யாக குண்டத்தில் லட்சுமி குபேர ஹோமம் செய்வார்கள். பிறகு குபேரனுக்கு 16 அபிஷேகங்களும் சிறப்பு அலங்கார சேவையுடன் ஸ்வர்ண அர்ச்சனையும் நடத்தப்படுகிறது.

அன்றையதினம் வியாபாரப் பெருமக்கள், தொழில் வளர்ச்சிக்காக வெளியூர்களிலிருந்தும் வந்து அர்ச்சனை வழிபாடுகள் செய்வார்கள். அழகன் முருகன் சன்னதியில் அருளாட்சி செய்பவனை பொருளும் பொண்ணும் குவியச்செய்வோனை குபேரனை நாகைக் காரோணம் சென்று நலம் வேண்ட வாகை சூடுவோம் வார்கடல் பூமியிலே!

கடந்த 2011-ம் ஆண்டு மே மாதத்தில் குடமுழுக்கு விழாவைக்கண்டுள்ள இந்த முருகனின் சன்னதியில் குபேரன் புதுப்பொலிவுடன் யந்திர ஸ்தாபனம் செய்யப்பெற்று பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum