தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எட்டுக்குடி வேலவன் ஆலயம்

Go down

எட்டுக்குடி வேலவன் ஆலயம் Empty எட்டுக்குடி வேலவன் ஆலயம்

Post  birundha Sat Mar 30, 2013 9:30 pm

ஸ்தல வரலாறு....

முருகன் தலங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு வகையில் தனி சிறப்புகள் கொண்டு திகழ்கின்றன. அந்த வகையில் நாகையில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் உள்ள எட்டுக்குடி வேலவன் ஆலயம் மகிமை நிறைந்தது. நாம் எந்த வடிவத்தை நினைக்கிறோமோ, அதற்கு ஏற்ப உருவத்தை மாற்றிக்கொண்டு காட்சி தருபவர் எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி.

குழந்தையாக எண்ணிப்பார்த்தால் குழந்தை வடிவிலும், முதியவராக நினைத்து பார்த்தால் வயோதிக வடிவிலும், இளைஞனாக எண்ணிப் பார்த்தால் இளைஞர் வடிவிலும் இவர் காட்சி தருவார். சூரனை அழிக்க அம்பெடுக்கும் கோலத்தில் இவர் அருள் பாலிக்கிறார். கந்தசஷ்டி இங்கு விசேஷம். நாகப்பட்டினம் அருகிலுள்ள பொருள்வைத்தசேரி கிராமத்தில் தெய்வத்தன்மை வாய்ந்த சிற்பி ஒருவன் இருந்தான்.

`சரவணபவ' என்ற ஆறெழுத்து மந்திரத்தை ஓதிய வண்ணம் இருந்த இவன் அழகிய ஆறுமுகம் கொண்ட வேலன் சிலையை செய்தான். அப்போது ஆட்சியில் இருந்த பராந்தக சோழ மன்னன் அச்சிலையின் அழகைப்பார்த்து ஆனந்தம் கொண்டான். இது போல இன்னொரு சிலையை செய்து விடக்கூடாது என்பதற்காக சிற்பியின் கட்டை விரலை வெட்டி விட்டான்.

என்றாலும் சிற்பி மனம் தளராமல் அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு சென்றான். கடுமையான முயற்சி எடுத்து மற்றொரு சிலையை செய்தான். அதை அவ்வூரை ஆண்ட குறுநில மன்னன் முத்தரசன் பார்த்தான். அந்த சிலையிலிருந்து ஒளி வீசியது. சிற்ப வேலை நிறைவு பெற்றதும் சிலைக்கு உயிர் வந்தது.முருகன் அமர்ந்திருந்த மயில் பறக்க ஆரம்பித்தது.

மன்னன் அந்நேரத்தில் வர அதை `எட்டிப்பிடி' என உத்தரவிட்டான். காவலர்கள் மயிலை பிடித்தனர். அதன் கால்களை சிறிதளவு உடைத்தனர். அதன் பின் மயில் சிலையாகி அங்கேயே நின்று கொண்டது. எட்டிப்பிடி என்ற வார்த்தை காலப்போக்கில் `எட்டிக்குடி' என மாறி தற்போது `எட்டுக் குடி' ஆகியுள்ளது.

பயந்த சுபாவமுடைய குழந்தைகளை இத்தலத்துக்கு அழைத்து வந்தால் பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. ஏனெனில் இங்கு முருகன் அம்பறாத் தூணியிலிருந்து அம்பை எடுக்கும் நிலையில் வீர சவுந்தரியம் உடையவராகத் திகழ்கிறார்.

சூரனை அழிப்பதற்காக உள்ள இக்கோலம் பற்றி குழந்தைகளுக்கு விளக்கி சொன்னால் அவர்கள் ஆற்றல் உடையவர்களாக திகழ்வார்கள் என்பது நம்பிக்கை. இங்கு சத்ரு சம்ஹாரம் திரிசபை எனும் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. எதிரிகளால் ஏற்படும் துன்பம் தீர இப்பூஜையை நடத்துவார்கள். எதிரிகளால் ஏற்படும் நியாயமான துன்பங்களுக்காக மட்டுமே இப்பூஜையை செய்ய வேண்டும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum