தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருப்போரூர் கோவில்

Go down

திருப்போரூர் கோவில் Empty திருப்போரூர் கோவில்

Post  birundha Sat Mar 30, 2013 9:28 pm

ஸ்தல வரலாறு......

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம் ஹார விழாவை நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தலங்களுள் திருப்போரூர் கந்தசுவாமி கோவில் தனித்துவம் கொண்டது. ஏனெனில் அசுரர்களை அழிக்க முருகன் போரிட்ட 3 முக்கிய இடங்களில் திருப்போரூரும் ஒன்றாகும்.

திருச்செந்தூரில் சூரபத் மனுடன் போரிட்ட முருகன் மாயையை அடக்கினார். இந்த போர் திருச்செந்தூர் கடலில் நடந்தது. திருப்பரங்குன்றத்தில் அசுரர்களுடன் சண்டையிட்ட முருகர் கன்மத்தை அதாவது வினைப் பயனை அழித்தார். இந்த போர் நிலத்தில் நடந்தது. திருப்போரூரில் தாரகசுரனை எதிர்கொண்டு சண்டையிட்ட முருகன் அவனது ஆணவத்தை அடக்கி ஞானம் கொடுத்தார்.

இந்த போர் விண்ணில் நடந்தது. இதனால் திருப்போரூர் தலம் போரூர் என்றும் அழைக்கப்படுகிறது. தாரகனுடன் போர் நடந்த காரணத்தால் தாருகாபுரி, சமராபுரி என்றும் பெயர்கள் ஏற்பட்டன. கந்த சஷ்டி கவசத்தில் இத்தலத்து முருகன், சமராபுரிவாழ் சண்முகத்தரசே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகயை சிறப்பு வாய்ந்த திருப்போரூர் கந்த சுவாமி சுயம்பு மூர்த்தியாக தோன்றியவர் ஆவார். இதன் காரணமாக பிரதான பூஜைகள் செய்வதற்காக சுப்பிரமணியர் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். கூர்ம (ஆமை) பீடத்தின் மேலுள்ள இந்த யந்திரத் தில், முருகனின் 300 பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

முருகனுக்கு பூஜை நடந்தபின், இந்த யந்திரத்திற்கு பூஜை நடக்கும். செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி முருகன் என்பதால், செவ்வாய் தோஷமுள்ளவர்கள் இந்த யந்திரத்திற்கு (ஸ்ரீசக்ரம்) திரிசதி அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.

முருகன் சன்னதி சுற்றுச்சுவரில் அவரது ஒரு வடிவமான குக்குடாப்தஜர் (குக்குடம் என்றால் சேவல்) சிலை உள்ளது. ஒரு கையில் சேவல் வைத்திருப்பதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. பாஸ்போர்ட், விசா கிடைக்க தாமதம் அல்லது சிக்கல் இருந்தால், வெளிநாடு செல்ல முடியதாவர்கள் இவருக்கு அர்ச்சனை செய்து வேண்டிக் கொள்கிறார்கள்.

வெளிநாட்டிலுள்ள உறவினர்கள் நலமாக இருக்கவும் இவரை வேண்டிக் கொள்வதுண்டு. கந்தசுவாமி இத்தலத்தில் அனுக்கிரகம் செய்யும் மூர்த்தியாக அருளுகிறார். கோயிலுக்கு அருகிலுள்ள குன்றில் கைலாசநாதர், பாலாம்பிகை கோயில் உள்ளது. இவ்வாறு மலையில் சிவனும், அடிவாரத்தில் முருகனுமாக அமைந்த தலம் இது. முன்பு, முருகன் சிலை மட்டும் இருந்தது.

பின்னர் வள்ளி, தெய்வானை சிலைகளை பிரதிஷ்டை செய்தனர். முருகன் சுயம்புவாகத் தோன்றியவர் என்பதால் அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டும் சாத்துகின்றனர். சிவன் கோயில்களிலுள்ள அம்பாளுக்கும், பெருமாள் கோயில்களில் தாயாருக்கும் தான் நவராத்திரி விழா நடத்துவது வழக்கம். ஆனால், இங்கு சிவனின் மருமகள்களான வள்ளி தெய்வானைக்கு நவராத்திரி விழாவை நடத்துகின்றனர்.

இந்நாட்களில் வள்ளி, தெய்வானைக்கு ஒன்பது விதமான அலங்காரம் செய்யப்படும். சிவனைப்போல இங்கு ஐப்பசி பவுர்ணமியில் முருகனுக்கு அன்னாபிஷேகமும், சிவராத்திரியன்று இரவிலும் நான்கு கால பூஜையும் நடக்கிறது. இத்தலத்தில் முருகன் சிலை கண்டறியப்பட்டபோது, அது ஒரு பனை மரத்தில் செய்த பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த பாத்திரத்தை தற்போதும் வைத்துள்ளனர்.

அள்ளஅள்ளக் குறையாத அட்சயபாத்திரம் போல இந்தப் பானை செல்வத்தை தருவதாக ஐதீகம். நைவேத்தியத்திற்கான அரிசியை இதில்தான் வைத்துள்ளனர். இக்கோயில் ஒரு காலத்தில் மண்ணில் புதையுண்டு போனது. சுவாமி சிலையும் ஒரு பனை மரத்தடியில் இருந்தது. மதுரையில் வசித்த சிதம்பர சுவாமியின் கனவில் தோன்றிய முருகன், இதுபற்றி அவருக்கு தெரிவித்தார்.

சிதம்பர சுவாமி இங்கு வந்து, முருகன் சிலையைக் கண்டெடுத்து பிரதிஷ்டை செய்தார். கந்தசஷ்டி விழா இங்கு விசேஷமாக நடக்கும். இவ்வேளையில் கஜமுகன், பானுகோபன், சிங்கமுகன், சூரபத்மன், அஜமுகி, தாரகன் ஆகிய அசுரர்களை வதம் செய்வார். கோயில் பிரகாரத்தில் வான்மீகநாதர் சன்னதி உள்ளது.

பக்தர்களுக்கு புண்ணியம் கிடைக்க காரணமாக இருப்பதால் இவருக்கான அம்பிகைக்கு புண்ணியகாரணியம்மன் என்று பெயர். வழக்கமான சுவாமி விமானத்தின் மேலே ஒரு கலசம்தான் இருக்கும். இவளது சன்னதி விமானம், ஐந்து கலசங்களுடன் இருக்கிறது. கேதார கவுரி நோன்பன்று (தீபாவளிக்கு மறுநாள் வரும் விரதம்) இவளது சன்னதியில் விசேஷ பூஜை நடக்கும். இச்சமயத்தில், பெண்கள் சுமங்கலி பாக்கியத்திற்காக இவளுக்கு அதிரசம் படைத்து வேண்டிக்கொள்வர்
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum