குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க
தாய் தந்தையரின் தலையாய கடமைகளுள் ஒன்று தங்கள் குழந்தைகளின் கல்விக்குச் சரியான வழிகாட்டுவது. எவ்வளவு தான் செலவழித்து நல்ல பள்ளியில் பயில்வித்தாலும், பயிலும் குழந்தைகளின் தரமும் உழைப்பும் எல்லாவற்றிற்கும் மேலாக இறைவன் அருளும் தான் அக்குழந்தை நன்றாகப் படிக்கிறதா என்பதை உறுதி செய்கிறது.
ஜாதகத்தில் 4, 5 வீடுகள் (லக்னத்திலிருந்து) கல்வி எப்படியிருக்கும் என்பதைத் தெரிவிக்கிறது. இந்த வீடுகள் சரி இல்லையெனில் கல்வி சுமாரும் அதற்குக் கீழும் தான். படிப்பில் சுமாராக உள்ள குழந்தைகள், அல்லது அவர்களுக்காக அவர்களுடைய தாய் தந்தையர், கலைமகளுக்கே ஞானத்தை அளித்த ஸ்ரீஹயக்ரீவரைத் துதித்தால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.
``ஞானானந்தமயம் தேவம்
நிர்மலஸ்படிகாக்ருதம்
ஆதாரம் சர்வ வித்யானாம்
ஹயக்ரீவம் உபாஸ்மஹே''
``இந்த பாடலுக்கு ஞானமும் ஆனந்தமயமமானவரும், தூய்மையான ஸ்படிகம் போன்ற தேகத்தை உடையவரும், சகல கல்விக் கலைகளுக்கு ஆதாரமுமானவரான ஸ்ரீஹயக்ரீ வரை நான் உபாசிக்கிறேன்'' என்று அர்த்தமாகும். ``வெள்ளைப் பரிமுகன்'' என்று ஸ்ரீதேசிகனால் பிரார்த்திக்கப்பட்டவர் ஸ்ரீஹயக்ரீவர்.
வேதங்களின் கரைகண்டவன் நான் என்ற செருக்குப் கொண்ட பிரம்மாவின் கர்வத்தை அடக்குவதற்காக மது கைடபர்களைத் தோற்றுவித்த மஹாவிஷ்ணு அவர்கள் மூலம் வேதங்களைப் பிரம்மாவிடமிருந்து கவர்ந்து மறைத்து வைத்தார்.
பிறகு நான் முகனின் பிரார்த்தனைக்குத் செவி சாய்த்து மீனாக அவதரித்து மதுகைடபர்களைக் கொன்று வேதங்களை மீட்டு, பின்னர் வெள்ளைப் பரிமுகனாகத் தோன்றி அவ்வேதங்களைத் தூய்மைப்படுத்தி நான்முகனுக்கு உபதேசித்தார். ஸ்ரீ தேசிகனுக்கு பரத்யட்சமாகக் காட்சி தந்தது போலவே மதகுருவான ஸ்ரீவாதிராஜருக்கும் காட்சி தந்தருளியவர் ஸ்ரீஹயக்ரூவர்.
ஸ்ரீவாதிராஜர் கி.பி. 1480 வாக்கில் வாழ்ந்த மகான். ஹயக்ரீவருக்கு மிகவும் உகந்த பிரசாதமாகிய நன்றாக வேக வைத்த கடலைப் பருப்பு, துருவிய தேங்காய், வெல்லம் சேர்த்து, நெய்விட்டுக் கிளறிய ``ஹயக்ரீவபண்டி'' என்ற பெயர் கொண்ட பதார்த்தத்தை தினந்தோறும் ஒரு தட்டிக் வைத்து தலை மீது வைத்துக் கொண்டிருப்பார்.
ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமான் ஒரு வெள்ளைக் குதிரை வடிவில் இவருக்குப் பின்னால் வந்து நின்று இரு முன்னங்கால்களை இவர் தோள்களின் மீது வைத்து அதைப் புசிப்பது வழக்கமாம். இந்த ப்ரஸாதத்தை ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்தன்றும் செய்து சுவாமிக்கு நிவேதனம் செய்வது விசேஷம்.
கேட்டவற்றை உடனே அளிக்கக்கூடியவர் ஸ்ரீ ஹயக்ரீவர். குதிரை முகத்தையுடையவராக மகாலட்சுமியை இடது பக்கம் மடிமேல் இருத்திக் கொண்டுள்ள, தூய்மையான ஸ்படிகம் போன்ற உடலையுடைய, தாமரை மலர் மேல் அமர்ந்துள்ள ஸ்ரீஹயக்ரீவ வரை மனத்தில் தியானித்து, ஹயக்ரூவ பஞ்ஜர ஸ்தோத்திரத்தைக் கூறுபவர்களுக்கு எல்லாக் கஷ்டங்களும் நீங்கி விரும்பியது யாவும் கிடைக்கும்.
குழந்தைகளைப் படிப்பில் மேன்மை அடையச் செய்யும். இதைக் கூறுவதற்கு நியமநிஷ்டைகள் கிடையாது. உச்சரிப்பில் தவறு நேர்ந்தாலும் மன்னிப்பார். இதை எல்லோரும் நாள்தோறும் ஒருதடவையாவது கூறி எல்லா வளமும் பெறலாம்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» குழந்தைகள் அம்மாவை கண்டது அழுகையை நிறுத்துவது ஏன்?குழந்தைகள் தாயிடம் அதிக பாசம் காட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். சில குழந்தைகள் அழுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அம்மாவை பார்த்தாலே உடனே அழுகையை நிறுத்திவிடும். பிறந்து சில மாதங்களில் ஆட்களை
» சிறந்து வாழ சிறகை விரி
» படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி?
» கூந்தல் அழகுடன் விளங்க ஆலோசனைகள் சில:
» வேதநெறி தழைத்தோங்க! மிகுசைவத் துறை விளங்க!
» சிறந்து வாழ சிறகை விரி
» படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி?
» கூந்தல் அழகுடன் விளங்க ஆலோசனைகள் சில:
» வேதநெறி தழைத்தோங்க! மிகுசைவத் துறை விளங்க!
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum