திருவெண்காடு
Page 1 of 1
திருவெண்காடு
தாரைக்கும் சந்திரனுக்கும் பிறந்தவர் புதன். அவர் பிறப்பில் களங்கம் ஏற்படுகிறது. இதைப் போக்க புதன் சரவண வனம் என்ற இமயமலைச் சாரலில் உள்ள இடத்திற்குச் சென்று தவம் புரிகிறார். அவர் தவத்தில் மகிழ்ந்து மகாவிஷ்ணு அவருக்குக் காட்சியளிக்கிறார். புதன் சகல கலைகளையும் வேதங்களையும் கற்றுக் கொள்கிறார். வாணிஜ்ய நிபுணாய என்றும் அழைக்கப்படுகிறார்.
மறுபடி புதன் வஷிஷ்டர் ஆலோசனைப்படி திருவெண்காடு சென்று அங்குள்ள சந்திர புஷ்கரணியில் மூழ்கி ஸ்வேதாரண்யேஸ்வரரையும் அன்னை பெரியநாயகியையும் நோக்கி தவம் புரிகிறார். அவருக்கு ஸ்வேதாரண்யர் அருளாசி அளிக்கிறார். இதனால் அவர் பிறப்பில் ஏற்பட்ட தோஷம் நீங்குகிறது. அனைவரும் அவரை வணங்கும் வண்ணம் புதன் என்ற கிரக பதவியும் கிடைக்கிறது.
இத்தலத்தின் எல்லைக்கு வந்த சம்பந்தர் ஊர் முழுவதும் சிவலிங்கங்களாக தோற்றமளித்தது கண்டு அங்கிருந்தபடியே அம்பாளை வேண்டினார். அம்பாளும் பிள்ளை இடுக்கி அம்மன் உருவில் சம்பந்தரைத் தூக்கி வந்தாராம். அந்த இடம் 'கூப்பிட்டான் குளம்' எனப்படுகிறது. இத்தலத்தில் மூன்று மூர்த்திகள், சிவன், வீரபத்திரர், நடராசர், அதைப் போல் மூன்று தீர்த்தங்கள், அக்கினி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், நடராசப் பெருமானின் அனந்த நடனத்தைக் கண்டு பார்வதி தேவி வடித்த கண்ணீர்த் துளிகளிலிருந்து இந்த மூன்று தீர்த்தங்களிலும் நீராடினால் "தேயாத தீவினையும் வல்வினையும் போகும்'' என்று சீகாழிப்பெருமான் பாடியுள்ளார்.
வெண்காடே வெண்காடே என் பீராகில் விடாத வல்வினை நோய் விரட்டலாமே என அப்பர் பெருமான் பாடியுள்ளார். அச்சுதக் களப்பரும் அவர் மனைவியும் நோன்பிருந்து இந்த மூன்று தீர்த்தங்களிலும் நீராடி திருவெண்காட்டீஸ்வரரை வழிபட்டு மெய்கண்டாரைப் புதல்வராகப் பெற்றனர். இந்த மூன்று தீர்த்தங்களிலும் நீராடி திருவெண்காட்டீஸ்வரரை நம்பிக்கையுடன் வழிபட்டால் மகப்பேறு கிட்டும்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum