தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சனத்குமரேஸ்வரர் கோவில்

Go down

சனத்குமரேஸ்வரர் கோவில் Empty சனத்குமரேஸ்வரர் கோவில்

Post  birundha Sat Mar 30, 2013 9:07 pm

திருத்தண்டிகைபுரம்! தண்டனை பெற்றவர்களுக்கும் சாப விமோசனம் தரும் ஈஸ்வரன் கோவில் கொண்ட தலம். குபேரனுக்கே சாப விமோசனம் அளித்த இந்த ஆலயத்தை ஒரு முறை தரிசிக்கச் செல்வதற்கு முன் அதன் மகிமையை பற்றி அறிந்து கொள்வோம்.

குபேரன் செய்த பாவம்:-

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் அடைந்த போது வெளிப்பட்ட சங்கநிதி பதுமநிதி உள்ளிட்ட ஐஸ்வர்யங்கள் அனைத்தும் ஸ்ரீமத் நாராயணனிடம் உறையும் மகாலட்சுமி அருகில் வந்து சேர்ந்தன. அவன் திருமாலிடம் அனைத்தையும் சமர்பிக்க எம்பெருமான் குபேரனை அழைத்து நிதிகள் எல்லாவற்றையும் கொடுத்து சமயம் வரும் போது தர்மநெறி தவறாமல் கொடுத்து வர பணித்தார்.

நிதிகளின் தலைவனான குபேரன் ஒரு சமயம் பஞ்சமா பாதகச் செயல்களில் ஒன்றான பிறன் மனை, காணில் என்ற குற்றத்தைச் செய்து விட்டான். பாதகம் செய்தவனிடம் நிதிகளும் ஐஸ்வர்யங்களும் விலகிச் சென்றுவிட நிற்கதியாக நின்று தவித்தான். அலைந்து திரிந்தவன் சப்தரிஷிகளைச் சந்தித்து பாவ விமோசனம் பெறுவதற்கு வழியைக்கேட்டு காலில் விழுந்தான்.

அவனது வேண்டுகோளுக்கு மனம் இறங்கிய ரிஷிகள் அனைவரும் திருத்தண்டிகை புரத்துக்குச் சென்று அங்கு அமைந்துள்ள சோம தீர்த்தத்தில் நீராடி எம்பெருமான் சனத்குமரேஸ்வரரையும் அம்பிகை சௌந்தர நாயகியையும் தரிசித்து வில்வதனத்தால் அர்ச்சித்து தீபம் ஏற்றி வழிபட்டால் விமோசனம் கிடைத்து விடும் என்றனர்.

ரிஷிகளின் அறிவுரைப்படி குபேரன் இத்தலம் வந்து மாசிமாத மகநட்சத்திர நாளில் சூரிய உதயகாலத்தில் அங்குள்ள சோம தீர்த்தத்தில் நீராடி கருவறையில் சாமன மேனியனாய் வீற்றுள்ள சனத்குமரேசரையும், உடனுறையும் அழகு நாயகியான சௌந்தர நாயகி அம்மனையும் மனமுருகி பூஜை செய்தான்.

அதன் பலனாக இழந்து விட்ட நிதிப்பொறுப்பு அஷ்ட ஐஸ்வர்யங்களையும் சித்திகள் பலவற்றையும் பெற்று மகிழ்ச்சி அடைந்தான். தலவரலாற்றைக் காணும் போது ஈஸ்வரன் நிதி தொடர்பான வழக்குகளையும், பிரச்னைகளையும் தீர்க்கும் ஓர் அறக்கடவுளாகவும் விளங்குகிறான் என்று அறிய முடிகிறது.

தலச்சிறப்பு:- சிவலிங்கத்திருமேனிகள் எல்லா சிவாலயங்களிலும் கிழக்கு நோக்கியவாறு காட்சி தருவார்கள். ஆனால் இங்கே மேற்கு பார்த்தவாறு அம்பிகை தென்முகமாகவும் எழுந்தளி உள்ளதை குறிப்பிட வேண்டும்.

குபேரன் வழிபட்டுப்பேறு பெற்றதால் திவ்யலிங்கம் எனவும், சப்த ரிஷிகள் வழிபட வந்ததால் ஆர்ஷலிங்கம் என்றும் வரலாற்றில் செய்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் 21-ம் நாள் காலையில் சூரிய பகவான் இறைவன் மீது தனது பொற்கிரணங்களை வீசும் போது பெருந்திரளான மக்கள் ஈசனை வணங்கி அருள் நலம் பெறுவர்.

12 ஆண்டுகளுக்கு முன் ஆலய பரிபாலனம் குறித்து வலம் சென்ற காஞ்சி மகாமுனிவர் இத்தலத்திற்கு பிரதோஷ காலத்தில் வந்த போது சிவலிங்க சக்தி குறித்து தெரிவித்துச் சென்றார். 1999-ம் ஆண்டு மார்கழி மாதப் பௌர்ணமி நாளில் அரவம் என்று அம்பிகை மடியில் பிள்ளையைப் போல 4 நாட்கள் தவழ்ந்து இருந்ததை பக்தர்கள் கண்டனர்.

சோம தீர்த்த மகிமை...

சந்திரன், குபேரன் ஆகியோர் புனித கங்கையில் நீராடி பாவங்களைப் போக்கிக் கொண்டு இழந்த செல்வங்களைப் பெற்றார்கள். இழந்தவற்றை மீட்டுத் தருகிற சக்தி பெற்ற சோம தீர்த்தத்தில் நீராடினால். பல பிறவிப் பாவங்களும் இழந்த செல்வங்கள் கிடைக்கின்ற பேரும் அடைய முடியும்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்துள் உள்ளது எஸ்.புதூர். முதலில் 5 ஊர்களுக்கு பொது ஊராக இருந்ததால் பொது ஊர் எனப்பட்டு பிறகு பல புதூர் உள்ளதால் எஸ். புதூர் (செக்கராங்குடி புதூர்) என்று ஆகியது. திருத்தண்டிகை புரமே பழைய புராணப் பெயராகும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum