தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பொதிகை மலை

Go down

பொதிகை மலை Empty பொதிகை மலை

Post  birundha Sat Mar 30, 2013 8:27 pm

அகத்திய மாமுனிவன் வாழும் மலை, சந்தனத் தென்றலும் தீந்தமிழும் தவழும் மலை, தெய்வீக மலை, கயிலையில் சிவபெருமானும், பொதிகையில் சீடனும் அருள்பாலிக்கும் மலை, தென்றலங்கிரி, செம்புவரை, சந்தப் பொருப்பு, ஏக பொதிகை தமிழ்க்கிரி, மந்தமாருதவரை எனப்பல திருநாமங்களைப் பெற்றமலை பொதிகைமலை.இம்மலையின் சிறப்புகள் எல்லா புராணங்களிலும் திருமுறைகளிலும் பேசப்பட்டன.

மெஞ்ஞானம் முற்ற துறவிகள் அடைவதற்கு எளிதான மலை பொதிகை மலை. ஆனால் மற்றவர்கள் அடைவதற்கு அரியது. இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும், பெருமை தாங்கிய தாமிர பரணியும், குளிர்சந்தனமும், தென்றல் காற்றும் தன்னகத்தே கொண்ட மலையாகும். அகத்திய முனிவரின் ஆட்சிக்கு உட்பட்டது.

முனிவரின் ஆட்சிக்கு உட்பட்ட தோரமலையில், அகத்தியர் தன் சீடர்களுக்கு அறுவை சிகிச்சை முறைகளை அருளி யதாக வரலாறுகள் கூறுகின்றன. சிவபெருமானுக்கு ஈடானவர் என்று சிவபெருமானால் போற்றப்பட்டவர். காலத்தால் கணக்கிட முடியாதவர், பொதிகை மலையில் வீற்றிருந்து அருள்பாலிப்பவர் முதலாம் தமிழ்ச சங்கத்தில் சிவபெருமானுடன் தமிழை ஆராய்ந்தவர்.

அகத்தியம் என்ற முதல் தமிழ் நூலை அருளியவர் ஆவார். கிருதாயுகம், திரேதாயுதம், துவாபலயுகம் கலியு கம் ஆகிய நான்கு யுகங்ளிலும் வாழ்ந்தவர். தொல் காப்பியருக்கு குருவாயிருந்து முன்னரே தமிழ் இலக் கணம் வகுத்தவர். சிவாலய முனிவருக்கு பொதி கையில் காட்சியருளி அகத்தியர் தேவாரத் திரட்டு வழங்கியவர்.

முத்தமிழ் வித்தகர் மட்டுமல்ல. முன்னோடியும் அவரே. திருவிசைப்பாடியருளிய கருவூர் தேவருக்கு காட்சியளித்தவர். முருகப் பெருமானைக் குருவாகக் கொண்டவர். சிவ தர்மோத்ரம் என்ற நூலை குறுமுனிக்கு முருகப் பெருமான் உபதேசித்துள்ளார். இதில் நரக வாழ்க்கை எப்படியிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அகத்தியர் பெருமாள் இராமபிரானுக்கு உபதேசத்தில் நூல் சிவகீதையாகும். எல்லா முனிவர்களுக்கும் முதன்மையானவர். சிவபெருமானுடைய அறுபத்து நான்கு திருவிளையாடல்களையும் அகத்திய மாமுனிவர் கூற, மற்ற முனிவர்கள் கேட்டனர் என்பது வரலாறு. இந்திரனுக்காக கடல் நீரை வற்றச் செய்தவர். புலவர் நக்கீரனுக்கு சிவபெருமான் இலக்கணம் உபதேசித்தவர்.

ஜோதிடம் வான சாஸ்திரம், மருத்துவம் இவைகளை உலகிற்கு அருளியவர். பதினெண் சித்தர்கள் இவரையே கருவாகக் கொண்டவர்கள் சிவபெருமானைக் காணும் வல்லமை பெற்றவர். எல்லாவற்றிக்கும் மேலாக குறுமுனி, பொதிகை மலை வந்தடைந்தவுடன் வடக்கும், தெற்கும் சமமாயின என்றால் முனிவர் பெருமையை ஆற்றலை யார் அறிவார்.

அகத்திய முனியின் திருவருளால்தான் சிவபெருமானின் திருவடிகளை அடைய முடியும். இது சைவ சாத்திரங்கள் கூறும் வழி முறையாகும். தமிழ்மொழிக்கு இலக்கணம் வகுத்ததும் அகத்திய முனிவர்தான். சிவபெருமானின் திருவருளை நோக்கி செய்யும் விரதங்களில் சோமவார விரதம் மேன்மையானது.

அகத்தியர் மாமுனிவர் சேர, சோழ, பாண்டியர்களுக்கு இவ்விரதம் கடைப்பிடிக்கும் முறையை எடுத்துச் சொல்கிறார். இவ்வரலாறு திருவிளையாடல் புராணத்தில் இந்திரன் முடிமேல் வனை எறிந்த படலத்தில் ஆசிரியர் பரஞ்சோதி முனிவர் கூறுகிறார். உக்கிர குமார பாண்டியன் காலத்தில் தமிழ்நாட்டில் மழை இல்லை.

வறுமை வந்தது. வறுமையை ஒழிக்க, மூவேந்தர்களும் பொதிகை மலை அடைந்து தவம் செய்து முனிவரைச் சந்தித்தனர். அகத்திய முனிவன் கோள் நிலைகளை ஆராய்ந்து பார்த்து, இனிமழை பெய்யாது. அதற்குரிய காரணங்களைக் கேளுங்கள், மிக்க சினமுளம் உள்ள சூரியனும் செவ்வாயும் முன்னே செல்ல, சுக்கிரன் அவற்றிற்குப் பின்னே செல்லும் இந்த செயலினால் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மழை கிடையாது என்று வேத நூல்கள் கூறுகின்றன.

இதை இந்திரனிடம் கூறுங்கள் என்றார். சோமவாரவிரதம் இருந்தால் இந்திரலோகம் சென்று தேவேந்திரனைச் சந்திக்கலாம் என்று கூறி, எப்படி விரதம் நோற்க வேண்டும் என்று முறையை விவரித்தார். மதுரை சோமசுந்தரனுக்குரிய விரதம் சோமவார விரதம், காசி முதலிய சிவத்தலங்களில் நோற்கும் விரதங்களை விட மதுரையில் நோற்பவருக்குப் பலம் அதிகம்.

பொதிகை மலையில் சிவபிரான் திருமணக்கோலம் காண்பது எந்நாள் என்று நினைத்திருக்கும் சமயத்தில் கயிலையின் முன் சொல்லிய திருவாக்கின்படி சித்திரை மாதம் பிறப்பு தினத்தில் அகத்தியருக்கு காட்சி அருளினார். அகத்திய முனிவர் கண்கள் குளிரத்தரிசித்து விட்டு அடியேனுக்கு காட்டிய திருமணக் கோலக்காட்சியை வருடம் தோறும் சித்திரை மாதப் பிறப்பிலே காண்பித்து, அதை தரிசித்தவர்களுக்கு அவர்களுடைய பாவங்களைப் போக்கியருள வேண்டும் என்று வரம் கேட்க, சிவபிரான் அவ்வாறே வரம் கொடுத்தருளினார்.

குறுமுனிவரைப் பார்த்து பொதிகை மலை, தென் கயிலைமலை என்பதால் நீர் இம்மலையை விட்டு நீங்காமல் எப்போதும் இருத்தல் வேண்டும் என்று அருளினார். அன்று முதல் முனிவர் பொதிகை மலையில் தங்கி, அருள் பாலித்து வருகிறார். காலை, மதியம், மாலை ஆகிய மூன்று காலங்களிலும் சகளி கரணம் என்ற முனிவர்களுக்கே உரிய முறையில் குறுமுனிவர் வழிபாடு செய்வார்.

இவ்வாறு மூன்று வேளைகளிலும் சிவபூஜை செய்வதால், சிவலிங்கம் கிடைக்காத போது வெண்மணலைக் கூட்டிச் சிவலிங்கமாக வழிபட்டுள்ளார். அவர் கைப்பபட்ட அந்தமண்காலப்போக்கில் இறுகிச் சிவலிங்கமாகி விட்டது. பாரத தேசம் எங்கும் அகத்தியருக்கு திருக்கோயில் கள் உள்ளன. தனி சன்னதிகள் உள்ளன.

எண்ணற்ற அகத்திய தீர்த்தங்கள் உண்டு. குறிப்பாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சியிலும் முனிவருக்கு தனி ஆலயங்கள் உள்ளன. இங்கு அகத்திய முனிவரும் தேவி உலோப முத்திரையும் மூலவர்களாய் உள்ளனர். திருவிழாக் காலங்களில் பவனி வருவதைக் கண்டு மகிழாலாம்.

சித்திரை விசுத்திருவிழா முனிவருக்கு திருமணக் காட்சி அளிக்கும் திருவிழா ஆகும். கயிலை மலையிலிருந்து பொதிகை மலை வரை உள்ள எல்லா இடங்களிலும் அகத்தியமுனிவர் வழிபாடு உள்ளன. பொதிகை உச்சியின் உயரம் 6125 அடி உச்சியில் கேரள அரசுக்கு சொந்தமான அகத்தியர் சிலை கம்பீரமான முறையில் உள்ளது.

குறுமுனியின் உருவ திருமேனியை கண்டவர்கள் ஓடிச்சென்று வணங்குவதையும் கீழே விழுந்து புரள்வதையும், கண்ணீர் மல்க வழிபடுவதையும் காணலாம். நினைக்கும் பொழுது எல்லாம் இங்கு யாரும் வரமுடியாத புண்ணியத்தலமிது. ஆண்டுக்கு ஒருமுறைதான் வழிபட முடியும். மணம் குளிர தமிழ் முனியை வணங்கி பிரியாவிடை கொண்டு திரும்புவர்.

திரும்பி வரும்போது அடுத்த ஆண்டுதான் குறுமுனியை வழிபட முடியும் என்ற ஏக்கம் ஏற்படும். பொதிகைமலையில் மழையில் நனைந்தாலும் கடுங்குளிரில் வாடினாலும் எவர் உடம்பும் பாதிக்கப்படுவதில்லை. இதற்கு அகத்திய முனியின் திருவருளே காரணம் என்று இங்கு வரும் சாதுக்கள் கூறுகின்றனர்.

முற்பிறவிகளில் நாம் புண்ணியம் செய்து இருந்தால் மட்டுமே பொதிகை மலை யாத்திரை செல்ல முடியும். மலையாளிகள் பொதிகை மலையை அகத்திய பீடம் என்று கூறுகிறார்கள். ஆண்டு தோறும் தைப்பூசம் முதல் சிவராத்திரி வரை யாத்திரைக்கு அனுமதி உண்டு. பின்னர் அனுமதி இல்லை. குறுமுனியை மகாமுனி என்று கேரள மக்கள் போற்றி துதித்து வருகின்றனர்.

தமிழ்முனி திருஅருளால் சென்று, அவரை வழிபட்டு முனிவர் அருளாலே திரும்பியும் வரவேண்டும். திரும்பிய யாத்திரிகர்கள் காரையார் அணையில் நின்று அம்மலையையும் அங்குள்ள கடவுளாகிய குறுமுனியையும் நீண்ட நேரம் வணங்குவர். மூலிகை கலந்த பொதிகை தென்றல், தாமிரம் கலந்த சுத்தமான தாமிரபரணி தீர்த்தம் எல்லாவற்றிற்கும் மேலான பொதிகை மலையானின் திருவருள் ஆகிய இம்மூன்றையும் அனுபவித்த மன மகிழ்ச்சி ஏற்படும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum