தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருநாகேஸ்வரம்

Go down

திருநாகேஸ்வரம் Empty திருநாகேஸ்வரம்

Post  birundha Sat Mar 30, 2013 8:25 pm

ஸ்தல வரலாறு....

நாகராஜருக்கும்,துர்க்கைக்கும் அர்ச்சனைகள் செய்தல், கோமேதகம் அணிதல், உளுந்து தானம் கொடுத்தல் இவற்றில் இராகு தோஷம் குறையும். ராகுத்தலமான திருநாகேஸ்வரம் கும்பகோணத்திலிருந்து காரைக் கால் செல்லும் பாதையில் 7 கி.மீ. தூரத்தில் உள்ளது. ஒருவரது ஜாதகத்தில் ஏழாமிடத்தில் இராகு இருந்தால் விவாகம் தாமதமாகும்.

இல்லற வாழ்வு சிறப்பாக அமைய இராகுவின் அருள் தேவை. ஐந்தாமிடத்தில் இராகு இருந்தால் புத்திரதோஷம் ஏற்படுகிறது எனவே திருமணத்தடை, புத்திரதோஷம் நீங்க திருநாகேஸ்வரம் சென்று வழிபட்டால் அவை நீங்கும்.

பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் உள்ள 127 தலங்களில் இது 29 வது தலம் அப்பர்,சுந்தரர்,சம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்றது இத்தலம். நந்தி தேவர், சூரியன் ஆதிசேடஷன், அகலிகையின் கணவர் கௌதமர், நளன், பாண்டவர், வசிட்டர், இந்திரன், பிரம்மா, பகீதரன் ஆகியோர் இங்கு வந்து வழிபட்டுள்ளனர்.

நளன் தான் இழந்த மனைவி தமயந்தியை மீட்க இங்கு வந்து இத் தலத்து இறைவனை வணங்கினார். பாண்டவர்கள் தாங்கள் இழந்த செல்வத்தை மீட்க இங்கு வந்து வழிபட்டனர். சேக்கிழார் இத்தலத்தின் மீத மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார்.தன் னுடைய பிறந்த ஊரான குன்றத்தூரில் தாம் கட்டிய கோயிலுக்கு திரு நாகேஸ்வரம் என்று பெயர் சூட்டினார்.

ஆதிசேஷன்(நாகராஜன்) ஒரு சிவராத்திரியில் முதல் ஜாமத்தில் கும்பகோணம் ஸ்ரீநாகேசுவரசுவாமி கோயிலிலும், இரண்டாம் ஜாமத்தில் திருநாகேசுவரத்திலும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் ஜாமத்தில் நாகப்பட்டினத்திலும்( நாகைக் காரோணம்) வழிபாடு செய்கிறார். சிவராத்தியில் சிலர் இவ்வாறு இன்றும் நான்கு ஊர்களுக்கும் சென்று வழிபடுகின்றனர்.

காலையில் கும்பகோணத்திலும், உச்சிவேளையில் திரு நாகேசுவரத் திலும், மாலையில் திருப்பாம்புரத்திலும், அர்த்த ஜாமத்தில் நாகப் பட்டினத்திலும் ஆக ஒரே நாளில் நான்கு இடங்களிலும் வழி படும் வழக்கமும் உள்ளது. இராகு பகவான் சன்னதி வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் உள்ளது.

வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இராகு கால நேரத்தில் இராகு பகவானுக்கு பால் அபிஷேகம் செய்ய அதிக அளவில் கூட்டம் இருக்கும். இராகு காலத்தில் துர்கா பூஜை செய்வதும், எலுமிச்சம் பழ மூடியில் விளக்கேறி வைப்பதும் இராகு ப்ரீதியாகும் நாகராஜருக்கும் துர்க் கைக்கும் அர்ச்சனை செய்தல், கோமேதகம் அணிதல், உளுந்து தானம் கொடுத்தல் ஆகியவைகளால் ராகு தோஷம் நிவர்த்தியாகும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum