தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோவில்

Go down

ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோவில் Empty ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோவில்

Post  birundha Sat Mar 30, 2013 8:16 pm

கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம், மன்னார்குடி செல்லும் சாலையில் 17 கி.மீ. தொலைவில் உள்ளது. நீடாமங்கலத்தில் இருந்து வந்தால் 6 கி.மீ. இத்தலத்திற்கு திருஇரும்பூளை என்ற பெயரும் உண்டு. தேவாரப்பாடல் பெற்ற 274 தலங்களில் காவிரிக்குத் தென்கரையில் உள்ள 127 தலங்களில் 98-வது தலமாக விளங்குவது ஆலங்குடி.

மூலவர் சுயம்பு லிங்கமாகத் தோன்றிய ஆபத்சகாயர் ஆரண்யேசுவரர், காசியாரண்யேச்வரர் என்ற பெயர்களும் உண்டு. இறைவி பெயர்- ஏலவார் குழலியம்மை, குரு தட்சிணாமூர்த்தி விசேச தலம் - குருமூர்த்தி- பரிகாரத்தலம். விசுவாமித்திரர்,சுகுந்தர்,அகத்தியர், வீரபத்திரர் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டு பேறு பெற்றார்கள். பாடல் பெற்றதலம் திருஞான சம்பந்தரால் பதிகம் பெற்றது.

அப்பர் அடிகளால் திருவீழிமழலை திருத்தாண்டகத்தில் சேர்த்துப் பாடல் பெற்றது. திருஞான சம்பந்தர் தமது பாடல்களால் இத்தல அம்மனை சிறப்பித்துப் பாடியுள்ளார். பிற நவக்கிரக தலங்களில் அந்தக் கிரகம் ஈசனை வழிபட்டுப் பேறு பெற்றிருக்கும் இங்கே குரு தட்சிணாமூர்த்தியே குருக்கிரக பலனைத் தருகிறார். ஆதிசங்கரர் வழிபட்ட தலம் இது. திருவிடை மருதூர் மகாலிங்கப் பெருமானின் பரிவாரத் தலங்களில் ஆலங்குடி தட்சிணாமூர்த்தி தலம் உண்டு.

திருவிடை மருதூருக்கு பரிகார தலங்களாவன 1. திருவலஞ்சுழி- விநாயகர். 2. சுவாமிமலை முருகன், 3. திருவாடு துறை-நந்தி, 4. சூரியனார் கோவில்-நவக்கிரம், 5. திரு வாப்பாடி- சண்டச்வரர், 6. சிதம்பரம்- நடராசர், 7. சீர்காழி- பைரவர், 8. திருவாரூர்-சோமானகர்தரி, 9. ஆலங்குடி- தட்சிணாமூர்த்தி. பஞ்சாரண்யத் தலங்களில் ஆலங்குடி ஒன்று.

இதர தலங்கள் திருக்கருகாவூர், திரு அவளிவநல்லூர், திருஅரதைப் பெரம்பாழி, திருக்கொளம்புதூர் ஆகும். இத்தலம் விஷம் தீண்டாப் பதி பாம்பு கடித்து யாரும் இத்தலத்தில் இறந்தது கிடையாது. பஞ்சாட்சர மந்திரம் மிகச் சிறப்பு வாய்ந்தது பஞ்சாட்சரத்தை தொடர்ந்து ஜபித்து வருபவர்களிடம் பூதம், பிரேதம், பைசாசம், வேதாளம் முதலியவை ஒரு போதும் நெருங்காது.

எல்லாவித நோய்களும் அகலும், துன்பங்கள் தூரப் போகும் என்று ஆலங்குடி குருபகவானின் சிறப்புகளைப் பற்றிக் கூறும் காசியாரண்ய மகாத்மியம் என்ற நூல் கூறுகிறது. காசியில் இறந்தால் இறக்கும் முன் காசி விஸ்வநாதர் இறப்பவர் காதில் தாரக மந்திரமான ராம நாமத்தை ஓதி அவர்களை முக்கியடையச் செய்வதாக நம்பிக்கை உள்ளது.

அது போல் ஆலங்குடியில் இறப்பவர் காதில் ஈஸ்வரன் பஞ்சாட்சர உபதேசம் செய்து முக்தியளிக்கிறார் என்பது நம்பிக்கை. வியாழக்கிழமைகளில் ஆலங்குடி சென்று குரு பகவானைத் தரிசித்து அர்ச்சனை செய்து 24 தீபம் ஏற்றி வழிபட்டு 24 முறை கோவிலை வலம் வரவேண்டும்.

வியாழக்கிழமை தோறும் விரதம் இருப்பதாலும், நவக்கிரக குருவுக்கு அல்லது தெட்சிணாமூர்த்திக்கு வியாழன் அர்ச்சனை செய்வதாலும் தோஷங்கள் குறையும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum