தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சூரியனார் கோவில்

Go down

சூரியனார் கோவில் Empty சூரியனார் கோவில்

Post  birundha Sat Mar 30, 2013 8:15 pm

சூரியனுக்குரிய கிரகஸ்தலமான சூரியனார் கோவில் கும்பகோணத்தில் இருந்து 17 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பாதையில் ஆடுதுறை சென்றவுடன் அங்கிருந்து சூரியனார்கோவில் செல்லலாம். கும்பகோணத்தில் இருந்து பஸ் மூலமாகவும் செல்லலாம்.

இங்கு வந்து வணங்குபவர்களுக்கு சூரியபகவான் அருளால் இன்னல்கள் யாவும் மறையும். வெற்றி உண்டாகும். முதலில் சூரியனார் கோவிலுக்கு அருகில் உள்ள திருமங்கலக்குடி சென்று அங்கு பிராணநாதரையும், மங்கள நாயகியையும் வழிபட வேண்டும்.

இக்கோவில் தனி கோவில், திருமங்கலக்குடியும் சூரியனார் கோவிலும் முற்காலத்தில் அர்க்கவனம் என்ற ஒரே இடமாக இருந்து பின்னர் இரண்டு தலங்களாகப் பிரிந்துள்ளன. மங்கலக்குடி, மங்கல விநாயகர், மங்கலநாதர், மங்கல நாயகி, மங்கல தீர்த்தம் என்று ஐந்து மங்கலமுடைய தலம்.

இது பாடல் பெற்ற தலம். திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் அருளிய பதிகங்கள் உள்ளன. ஏழரை ஆண்டுச்சனி, அஷ்டமத்துச்சனி, ஜென்ம சனியால் தொடரப்பட்டவர்களும், வேறு பிற நவக்கிரக தோஷமுள்ளவர்களும் சூரியனார் கோவில் சென்று வழிபட வேண்டும். பன்னிரண்டு ஞாயிற்றுக்கிழமை காலம் வரை தங்கி வழிபடுதல் மிகச்சிறப்பு.

ஏதாவது ஓர் குறிப்பிட்ட ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இருந்து தொடர்ந்து பன்னிரண்டாவது ஞாயிற்றுக்கிழமை முடிகிறவரை சுமார் 78 நாட்கள் (இரண்டரை மாத காலம்) சூரியனார் கோவிலிலேயே தங்கி இருந்து ஒவ்வொரு தீர்த்தங்களிலும் நீராடி, உபவாசமிருந்து திருமங்கலக்குடி பிராணநாதரையும் மங்களநாயகியையும், சூரியனார் கோவில் நவ நாயகர்களையும் முறைப்படி வழிபட்டு, தோஷ நிவர்த்திக்கான பரிகாரங்கள் செய்து வந்தால் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்று இத்தல புராணம் கூறுகிறது.

ஒருவருடைய ஜாதகத்தில் களத்திர தோஷம், விவாஹ பிரதிபந்த தோஷம், புத்திர தோஷம், புத்திரப் பிரபந்த தோஷம், வித்யா பிரபந்த தோஷம், உத்தியோகப் பிரபந்த தோஷம் உள்ளவர்களும், சூரிய தசை, சூரிய புத்தி நடக்கிறவர்களும் சூரியனார் கோவிலுக்கு தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சென்று வழிபாடு செய்து வந்தால் தோஷங்கள் நீங்கும்.

இத்தலத்தின் வரலாறு....

கோவிலின் வெளியே வடக்கில் அமைந்துள்ள சூரிய புஷ்கரணியில் நீராட வேண்டும் இயலவில்லை எனில் அந்த தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொள்ளவும். பின்பு ராஜகோபுரத்திற்கு எதிரே நின்று தலைக்குமேல் இரு கைகளையும் குவித்து வணங்கி கோபுர தரிசனம் செய்யவும். பின்னர் கோவிலின் உள்ளே நுழைந்து தென்மேற்கு மூலையில் உள்ள கோள்தீர்த்த விநாயகரை தரிசிக்கவும்.

பின்னர் நர்த்தன மண்டப படிக்கட்டுகளில் ஏறினால் சபாநாயகர் மண்டபத்தை அடையலாம். அங்கு நடராசர், நவக்கிரக உற்சவமூர்த்தி ஆகியோரை தரிசித்து அடுத்துள்ள ஸ்தாபன மண்டபத்தில் உள்ள காசி விஸ்வநாதர் விசாலாட்சியை தரிசனம் செய்யவும். அடுத்துள்ள குருமண்டபத்தை அடைந்து சூரிய பகவான் சன்னதியில் நின்று அவருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

பிறகு திரும்பி அவருக்கு எதிரே உள்ள குருபகவானை வழிபட வேண்டும். பிறகு தெற்குப்புறம் உள்ள வாசல் வழியாக கீழே இறங்கி தெற்குப் பிரகாரத்தில் உள்ள கிழக்கு பார்க்க உள்ள சனீஸ்வரனையும், வடக்கு பார்க்க உள்ள புதன் பகவானையும், மேற்குப் பார்க்க உள்ள அங்காரகனையும் தரிசிக்க வேண்டும். பின்னர் வடபுறம் திரும்பி சந்திரன், கேது ஆகியோரை தரிசனம் செய்ய வேண்டும்.

பிறகு மேற்கு புறம் திரும்பி சுக்கிரனையும், இராகுவையும் தரிசனம் செய்ய வேண்டும். இறுதியாக தேஜஸ் சண்டிகேசுவரரையும் வழிபடுதல் அவசியம். அங்கிருந்து திரும்ப கோள்தீர்த்த விநாயகர் சன்னதியை அடைந்து ``எங்கள் கோள் நீக்கி வாழ்வை சிறப்படையச் செய்ய வேண்டும்'' என வேண்டிக் கொண்டு கொடி மரத்திற்கு அருகில் வந்து வீழ்ந்து வணங்க வேண்டும்.

பிறகு அங்கிருந்து பிரகாரம் சுற்ற ஆரம்பித்து ஒன்பது முறை வலம் வரவேண்டும். ஒன்பது முறை வலம் வந்த உடன் மறுபடியும் கொடி மரத்தடியில் வீழ்ந்து வணங்கி ஓரமாக உட்கார்ந்து நவக்கிரகங்களை தியானிக்க வேண்டும். இது தான் இங்கு வழிபாட்டு முறை. சூரியன் தன்னை வழிபடுபவர்களின் பகையையும், கவலைகளையும் போக்குகிறார். நினைத்த காரியங்களை முடித்து வைப்பார். கண்நோய், இருதய நோய், காமாலை ஆகிய நோய்களைப் போக்குவார்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum