தமிழர்களுக்கு உதவாதவரா இளையராஜா?-சீமானின் பேச்சுக்கு புலம்பெயர் தமிழர் பதிலடி!
Page 1 of 1

புதுக்கோட்டை : தமிழ் சொந்தங்கள் செத்து விழுந்தபோது, அவர்களுக்கு எந்த விதத்திலும் உதவாத இளையராஜா, வெளிநாடுகளில் கச்சேரி நடத்தப் போவது வருத்தமாக உள்ளது என சீமான் குற்றம்சாட்டியுள்ளார். சீமானின் இந்தப் பேச்சு உலகெங்கிலும் உள்ள தமிழர்களையும், ராஜாவின் ரசிகர்களையும் கொதிப்புக்குள்ளாக்கியுள்ளது.
2016 ல் புதிய அரசியல் வரலாறு படைப்போம் என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் நடந்தது.
கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில் இளையராஜாவை நேரடியாக தாக்கிப் பேசினார்.
அவர் பேசுகையில், “முள்ளிவாய்க்காலில் கடைசி நேரத்தில் நடேசன் வெள்ளைக் கொடியுடன் போன போது அவரை சுட்டு கொன்றார்கள். இதை பார்த்து சிங்களப் பெண்ணான நடேசனின் மனைவி சிங்களத்தில் அவர்களிடம் நியாயம் கேட்டார். அந்த பெண்ணையும் 20 சிங்கள ராணுவத்தினர் கற்பழித்துக் கொன்றார்கள்.
இத்தனை காலமும் வெளிநாடுகளுக்கு சென்று கச்சேரி நடத்தாத இசையமைப்பாளர் இளையராஜா இப்போது தமிழனின் விடுதலை நெருப்பை நீர்த்துப் போகச் செய்ய நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகு நவம்பர் 3 கனடா செல்கிறார்.
தமிழ் சொந்தங்கள் செத்து விழுந்த போது உணவுக்கோ, மருந்துக்கோ, துணிக்கோ இந்த இளையராஜா கச்சேரி நடத்தி உதவி செய்ய முன்வரவில்லை. ஆனால் இப்போது போவது வருத்தம் அளிக்கிறது,” என்றார்.
ரசிகர்கள் கோபம்…
சீமானின் பேச்சை பல லட்சம் ஈழத் தமிழர்களே கண்டிக்க ஆரம்பித்துள்ளனர். சீமானின் பேச்சு குறித்து தங்கள் எதிர்வினையை அவருக்கு வெளிப்படையான கடிதமாகவே எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், “இசை கேட்டால் விடுதலை உணர்வு நீர்த்துப் போகுமா… அதுவும் இத்தனை காலமும் தமிழனின் நாடி நரம்புகளில் ரத்தமாக பாய்ந்து கொண்டிருக்கும் ஒரு ஜீவ இசைக்குச் சொந்தக்காரரை எப்படி இப்படியெல்லாம் வாய்க்கு வந்தபடி பேச மனம் வருகிறது அரசியல்வாதிகளால்? சீமான் அவர்களே.. ராஜாவின் இசை தமிழர் சொத்து. அதை ஈழத் தமிழர்களின் பேரால் கொச்சைப் படுத்த வேண்டாம். மாவீரர் நாளை உங்கள் தனிப்பட்ட அரசியலுக்கு பயன்படுத்தவேண்டாம்,’ என்று தெரிவித்துள்ளனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முடிவடைந்த யுத்தம் தொடர்பில் மரண விசாரணை தேவையில்லை.. புலம்பெயர் தமிழர் தமிழ் மக்களுக்கு எதனை செய்தனர் கேட்கிறார் தயா மாஸ்டர்.
» யாரும் நிர்பந்திக்கவில்லை! – அஜீத் பேச்சுக்கு ரஜினி மறுப்பு
» சீமானின் அணுகுமுறை தப்பு சேரனின் பதிலால் சீறும் தம்பிகள்…
» தெளிவான பேச்சுக்கு
» சீமானின் திருமணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum