தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

58-ஐ எட்டிய கமல்! முத‌ல்வரிடம் ஆசி!! சினிமா பிரபலங்கள் வாழ்த்து!!!

Go down

58-ஐ எட்டிய கமல்! முத‌ல்வரிடம் ஆசி!! சினிமா பிரபலங்கள் வாழ்த்து!!! Empty 58-ஐ எட்டிய கமல்! முத‌ல்வரிடம் ஆசி!! சினிமா பிரபலங்கள் வாழ்த்து!!!

Post  ishwarya Sat Mar 30, 2013 12:55 pm

உலகநாயகன் என்று எல்லோராலும் அழைக்கப்பெறும் நடிகர் கமல்ஹாசன் இன்று(07.11.12) தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு இயக்குநர் சிகரம் பாலசந்தர், நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா, நடிகைகள் த்ரிஷா, குஷ்பு உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னதாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

களத்தூர் கண்ணாமாவில் ஆரம்பித்து இப்போது விஸ்வரூபம் வரை விஸ்வரூபமாக வளர்ந்து நிற்கிறார் கமல்ஹாசன். நடிப்பு, நடனம், இயக்கம், கதாசிரியர், பாடலாசிரியர், தயாரிப்பு என்று பன்முகம் கொண்ட கமல்ஹாசனுக்கு சினிமா மீது அப்படியொரு மோகம். எப்போதும் சினிமாவில் பல புதுமைகளை புகுத்தி கொண்டே இருக்கும் அவரது ஆற்றலுக்கு ஈடு இணை கிடையாது. இப்போதும் தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு கொண்டு வர போராடி கொண்டு இருக்கிறார். இப்போது கூட அவர் நடித்து, இயக்கி, தயாரித்து இருக்கும் விஸ்வரூபம் படத்தில் ஹாலிவுட் இணையான தொழில்நுட்பங்களை புகுத்தியுள்ளார். அதிலும் சவுண்ட் தொழில்நுட்பத்தில் ஆரோ 3டி எனும் புதிய தொழில் உக்தியை புகுத்தியுள்ளார். இப்படத்தின் ஆரோ டிரைலரும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தனது பிறந்தநாளுக்கு ஆசி பெற்ற கமல், பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தன்னுடைய பிறந்தநாளுக்கு முதல்வரிடம் ஆசி பெற வந்ததாகவும், தனது விஸ்வரூபம் படத்தில் ஆரோ தொழில்நுட்பம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது குறித்தும், இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முதல்வருக்கு அழைப்பு விடுத்ததாகவும் கமல் தெரிவித்தார்.

நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு திரைநட்சத்திரங்கள் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்திகள்…

இயக்குநர் சிகரம் பாலசந்தர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது, இன்றைய நவீன சினிமாவை பற்றிய அத்தனை விஷயங்களும் கமலிடம் உள்ளது. தமிழ் சினிமாவில் அவர் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். விரைவில் ஹாலிவுட்டிலும் ஜெயிப்பார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

த்ரிஷா கூறியுள்ளதாவது, இன்றைய இளம் நடிகர்களுக்கு அவர்தான் ரோல்மாடல். அவருடன் நடித்தது மகிழ்ச்சியான தருணம். அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிரபுதேவா கூறியுள்ள வாழ்த்து செய்தியில், காதலா காதலா படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தியில் நாங்கள் இப்போது சாதிப்பதற்கு முன்னோடியே அவர் தான். பல வருடங்களுக்கு முன்பே இந்தியில் சாதனை நிகழ்த்தியுள்ளார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்துகள் கமல்…!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum