தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எந்த நடிகரையும் செட் பண்ணவில்லை- அசின்

Go down

எந்த நடிகரையும் செட் பண்ணவில்லை- அசின் Empty எந்த நடிகரையும் செட் பண்ணவில்லை- அசின்

Post  ishwarya Sat Mar 30, 2013 12:22 pm

கஜினி இந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டில் பிரவேசித்தவர் அசின். தமிழைப்போலவே அப்படம் இந்தியிலும் ஹிட் ஆனதால் அசினுக்கு நல்லதொரு என்ட்ரியை அப்படம கொடுத்தது. அதனால் தென்னிந்திய சினிமாவை டோட்டலாக மறந்து விட்டு முழுநேர இந்தி நடிகையானார் அசின். முக்கியமாக, அமீர்கான், சல்மான்கான், அக்ஷய்குமார் என்று முன்னணி நடிகர்களே அசினுக்கு நேரடியாக சிபாரிசு செய்யும் அளவுக்கு அவர்கள் மனதில் அசின் இருக்கிறாராம். இதனால் அசினை மேற்படி நடிகர்களுடன் இணைத்து பாலிவுட்டில் விதவிதமான காதல், கல்யாணம் போன்ற செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறதாம்.

ஆனால் இதுசம்பந்தமாக அசினை மீடியாக்கள் தொடர்புகொண்டபோது, மேற்படி ஹீரோக்கள் எனக்கு சிபாரிசு செய்வது எனது நடிப்புக்காக. நான் நன்றாக நடிக்கவில்லையென்றால் அவர்கள் என்னை சீண்டகூட மாட்டார்கள். மேலும், அமீர்கான், சல்மான்கான் போன்ற நடிகர்களை நான் திருமணம் செய்து கொள்ள செட் பண்ணுவதாகவும் செய்திகள் வருகிறது. இது ரொம்ப தவறான செய்தி. என்னை விட ரொம்ப பெரியவர்கள். அதனால் அவர்களுடன் என்னை இணைத்துப்பேச வேண்டாம். அதோடு, நான் ஆரம்பத்திலிருநதே சொல்வது ஒன்றுதான். எக்காரணம் கொண்டும் சினிமாவைச்சேர்ந்தவர்களை திருமணம் செய்து கொள்ள மாட்டேன். மேலும், நான சினிமாத்துறையினரை நண்பர்களாககூட வைத்துக்கொள்வதில்லை. எதிர்காலத்தில் சினிமாவை சாராத ஒருவரை திருமணம் செய்து கொண்டு சினிமா வாசனையே இல்லாமல் வாழ வேண்டும் என்பதுதான் எனது ஆசை என்று கூறியுள்ளார் அசின்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum