ஹயக்ரீவர் அவதாரம்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
ஹயக்ரீவர் அவதாரம்
பகவான், விஷ்ணு பிரளய காலத்தில் உலகையும் மக்களையும் தன்னுள்ளே தாங்கி, ஆலிலை பாலகனாய் பிரளயகால சமுத்திரத்தில் யோக நித்திரை செய்து வந்தார். பின் உலகப் படைப்பதற்காக, தன் நாபிக்கமலத்தில் இருந்து பிரம்மனைப் படைத்து நான்கு வேதங்களையும் உபதேசித்தார். பிரம்மனும் படைப்புத்தொழிலை ஆரம்பித்தார்.
ஒருமுறை பெருமானின் நாபிக்கமலத்தில் உள்ள ஓர் இதழில் இரண்டு தண்ணீர்த்திவலைகள் தோன்றி, மது, கைடபன் என்ற அசுரர்களாக மாறினர். இவர்கள் பெருமாளிடமிருந்து பிறந்த தைரியத்தில், பிரம்மனிடமிருந்த வேதங்களை அபகரித்து, தாங்களே படைப்புத்தொழில் செய்ய ஆசைப்பட்டனர்.
குதிரை முகம் கொண்டு, பிரம்மனிடமிருந்து வேதத்தைப் பறித்துக்கொண்டு, பாதாளத்தில் ஒளித்து வைத்தனர். வேதங்களை இழந்த பிரம்மன் பெருமாளைச் சரண் அடைந்தார். பெருமாள் வேதங்களை மீட்க பாதாள உலகம், வர அங்கே அசுரர்கள் குதிரை வடிவில் இருப்பதைக் கண்டார். உடனே தானும் குதிரை முகம் கொண்டு அவர்களுடன் போரிட்டு, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுத்தார்.
அசுரர்கள் கைப்பட்டதால் தங்களது பெருமை குன்றியதாக நினைத்த வேதங்கள் புனிதமாக்கும்படி பெருமாளை வேண்டின. குதிரைமுகத்துடன் இருந்த பெருமாள் வேதங்களை உச்சிமுகர்ந்ததால், அந்த மூச்சுக்காற்றில் வேதங்கள் புனிதமடைந்தன. அசுரர்களுடன் போரிட்ட ஹயக்ரீவர் உக்கிரமாக இருந்தார் என்றும், அவரை குளிர்விக்க லட்சுமியை அவர் மடியில் அமர்த்தினார்கள்.
இதனால் அவரை லட்சுமி ஹயக்ரீவர் என்றனர். வேதங்களை மீட்டவர் என்பதால், ஹயக்ரீவரர் கல்வி தெய்வமாகிறார். கல்வி உள்ள இடத்தில் லட்சுமியாகிய செல்வம் சேரும் என்பதால், லட்சுமியை இடது தொடையில் அமர்த்திருக்கிறார்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum