இனி ஆஸ்கர் வாங்கும் எண்ணமில்லை! -ஏ.ஆர்.ரஹ்மான்
Page 1 of 1

ஏற்கனவே 2 ஆஸ்கர் விருதுகளை வாங்கிவிட்டேன், மீண்டும் ஒருமுறை ஆஸ்கர் விருது வாங்கும் எண்ணம் இல்லை என்று இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அவதரித்து இன்று ஆஸ்கர் நாயகனாக வலம் வருபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். தமது இசையால் உலகம் முழுக்க ரசிகர்களை கொண்டுள்ள ரஹ்மான் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய மொழி படங்களை கடந்து ஹாலிவுட்டிலும் வெற்றிக்கொடி நாட்டியவர்.
1997ம் ஆண்டு தனது வந்தே மாதரம் ஆல்பத்தை வெளியிட்ட ரஹ்மான், கிட்டத்தட்ட 15வருடத்திற்கு பிறகு இரு தினங்களுக்கு முன்னர் “இன்பினிட் லவ்” என்ற தனது புதிய ஆல்பத்தை வெளியிட்டார். இந்த ஆல்பம் உலகம் முழுக்க சக்க போடு போட்டு கொண்டு இருக்கிறது. இப்போது இந்த ஆல்பத்தோடு சேர்த்து இன்னொரு இசை விருந்தையும் தர இருக்கிறார் ரஹ்மான். கிட்டத்தட்ட 11 வருடங்களுக்கு பின்னர், சென்னையில் நேரடி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்கிறார். வருகிற டிசம்பர் 29ம் தேதி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., வளாகத்தில் மாலை 6 மணியளவில் நடக்க இருக்கிறது.
இதற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது பேசிய ரஹ்மான், சென்னையில் 11 வருடத்திற்கு பிறகு இசை நிகழ்ச்சி நடத்த உள்ளேன். இதில் முழுக்க முழுக்க தமிழ் பட பாடல்களை பாட உள்ளேன். ரோஜா படத்தில் தொடங்கி தற்போது நான் இசையமைத்துள்ள கடல் படம் வரை உள்ள படங்களில் இருந்து பாடல்களை பாட இருக்கிறோம். பிரபல பின்னணி பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிஹரன், சித்ரா, பென்னி தயாள், கார்த்திக் உள்ளிட்ட பலர் பாட இருக்கின்றனர். இவர்களுடன் சேர்ந்து வெளிநாட்டு கலைஞர்களும், 5பெண் இசையமைப்பாளர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். நானும் 5 பாடல்களை பாட உள்ளேன். நான் இசையமைக்க வந்த போது பாடகர்கள் சற்று தடுமாறுவார்கள். ஆனால் இப்போது டி.வி., நிகழ்ச்சிகளில் இசை பற்றிய விழிப்புணர்வு நிறையவே ஏற்பட்டு இருக்கிறது. அதனால் தற்போது வரும் பாடகர்கள் நல்ல திறமைசாலிகளாக இருக்கின்றனர்.
சமீபத்தில் வெளியான என்னுடைய ஆல்பத்தை இந்தியா, ஹாங்காங், அமெரிக்கா, ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள குழந்தைகளை வைத்து எடுத்துள்ளேன். இந்த ஆல்பத்தில் எனது மகன் அமீனும் தோன்றியுள்ளான். ஆல்பமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றார். இசைநிகழ்ச்சியில் அமீனும் பங்கேற்பாரா என கேட்டபோது, இப்போது தான் அவன் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறான். அதனால் இந்த நிகழ்ச்சியில் அவன் பங்கேற்கவில்லை என்றார்.
மீண்டும் ஆஸ்கர் கனவு எதுவும் இருக்கிறதா என்று கேட்டபோது, ஏற்கனவே இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கிவிட்டேன். எனவே மீண்டும் ஆஸ்கர் விருது எல்லாம் வாங்கும் ஆசை இல்லை என்றார்.
தற்போது அதிக தமிழ் படங்களுக்கு இசையமைப்பது இல்லையே என கேட்டபோது, இந்தியில் இருப்பவர்களும் இதே கேள்வியை அங்கு கேட்கிறார்கள். தற்போது தமிழில் கடல், கோச்சடையான், மரியான் போன்ற படங்களுடன் இரண்டு பெயரிடப்படாத படங்களுக்கும் இசையமைக்க கமிட்டாகியுள்ளேன். தமிழ், இந்தி என எந்த மொழியையும் நான் பார்ப்பதில்லை. படத்திற்கு நல்ல கதை இருந்தால் அந்த மொழியில் இசையமைப்பேன் என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மீண்டும் ஆஸ்கர்! – ஏஆர் ரஹ்மான் நம்பிக்கை
» ஆஸ்கர் விருது – நடுவராக ஏ.ஆர்.ரஹ்மான் தேர்வு
» ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பாம்பே ஜெயஸ்ரீக்கு ஏஆர் ரஹ்மான் வாழ்த்து
» ரஹ்மான் லஞ்சம் கொடுத்து விருது பெறவில்லை-ஆஸ்கர் குழு பதில்
» ரஹ்மான் – ரசூல் பூக்குட்டி ஆஸ்கர் வாங்கும்போது நான் வாங்க மாட்டேனா? – சரத்குமார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum