தள்ளிப்போகும் விஸ்வரூபம் ரிலீஸ் தேதி?
Page 1 of 1
தள்ளிப்போகும் விஸ்வரூபம் ரிலீஸ் தேதி?
கமல் எழுதி இயக்கி தயாரித்தப்படம் விஸ்வரூபம். இப்படத்தை டிடிஎச் மூலம் வீடுகளில் முதலில் வெளியிடுவது, அடுத்த நாள் தியேட்டர்களில் வெளியிடுவது என்ற முடிவுக்கு கமல் வந்தார்.
இதனை வெளியிட்ட உடன் தமிழ் திரையுலகில் பெரும் சர்ச்சை எழுந்தது. கமல் முடிவை திரையரங்க உரிமையாளர்கள் ஏற்கவில்லை. அவரது எந்தப் படத்தையும் திரையிட மாட்டோம் என அறிவித்தனர். இன்னொரு பக்கம் கமல் மும்முரமாக டிடிஎச் முயற்சியில் இறங்கினார். ஏர்டெல், டாடா, ரிலையன்ஸ், சன், வீடியோகான், டிஷ் ஆகிய 6 டிடிஎச் நிறுவனங்கள் இதில் கமலுடன் கைகோர்த்தன. ஒரு இணைப்புக்கு ரூ 1000 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
எனவே கமலுக்கு பெரும் லாபம் கிட்டும் என்று எதிர்ப்பார்த்தனர். ஆனால் நடந்ததே வேறு. கமல் எதிர்ப்பார்த்த மாதிரி டிடிஎச்சில் முன்பதிவு நடக்கவில்லை. கடைசி நாளான நேற்றுவரை சில ஆயிரம் பேர்தான் ஒவ்வொரு டிடிஎச்சிலும் கட்டணம் செலுத்தி பதிவு செய்தனர்.
இன்னொரு பக்கம் 45 திரையரங்குகள் மட்டுமே இந்தப் படத்தைத் திரையிட முன்வந்தனர். இதனால் இந்தப் படத்தை டிடிஎச்சில் வெளியிடுவதிலிருந்து கமல் பின்வாங்கியதாகத் தெரிகிறது. அதே நேரம் படத்தை திட்டமிட்டபடி ஜனவரி 11-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதிலும் சிக்கல் எழுந்தது. காரணம் பொங்கலையொட்டி வெளியாகும் படங்களுக்கு அதிகபட்ச தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில் கமல் படத்துக்கு தரமான தியேட்டர்கள் கிடைக்காது என்பதாலும், படத்தை யார் வெளியிடுவது என்பதில் எழுந்த சிக்கல் காரணமாகவும், இப்போதைக்கு படத்தை ஜனவரி 25-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாக தெரிகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஸ்வரூபம் பிப்-7-ந் தேதி ரிலீஸ்: கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» தள்ளிப்போகும் துப்பாக்கி ரிலீஸ் - ரசிகர்கள் ஏமாற்றம்
» ராஜபாட்டை 23-ம் தேதி ரிலீஸ்!
» முகமூடி ரிலீஸ் தேதி
» கும்கி ரிலீஸ் தேதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum