தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கதை மோசடி புகார்: பாக்யராஜ் மீது வழக்கு போடுவேன்- பாலசந்தர் மகள் புஷ்பா கந்தசாமி ஆவேசம்

Go down

 கதை மோசடி புகார்: பாக்யராஜ் மீது வழக்கு போடுவேன்- பாலசந்தர் மகள் புஷ்பா கந்தசாமி ஆவேசம் Empty கதை மோசடி புகார்: பாக்யராஜ் மீது வழக்கு போடுவேன்- பாலசந்தர் மகள் புஷ்பா கந்தசாமி ஆவேசம்

Post  ishwarya Fri Mar 29, 2013 11:39 am

சந்தானம் நடிக்கும் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் கதை தன்னுடையது என்று இயக்குனர் பாக்யராஜ் குற்றம் சாட்டினார். அவர் நடித்த ‘இன்று போய் நாளை வா’ படத்தின் கதையே இப்படம் என்றும் தன்னிடம் அனுமதி பெறாமல் படத்தை எடுக்கின்றனர் என்றும் புகார் கூறினார்.

கதையின் உரிமை தன்னிடம் இருப்பதாக சொல்லி அதனை ராமநாராயணனுக்கு பாலசந்தர் மகள் புஷ்பா கந்தசாமி விற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி போலீஸ் கமிஷனரிடமும் புகார் அளித்துள்ளார்.

பாக்யராஜ் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து புஷ்பா கந்தசாமி கூறியதாவது:-

பாக்யராஜ் தேவை இல்லாமல் என்னை இந்த பிரச்சினையில் இழுத்துள்ளார். அவரை சந்தித்து “இன்று போய் நாளை வா” படத்தின் உரிமையை நான் கேட்டதாக சொல்லி உள்ளார். அதில் உண்மை இல்லை. பாக்யராஜை இதற்காக நான் சந்திக்கவே இல்லை. தமிழ் படங்களை தமிழிலேயே “ரீமேக்” செய்யும் வழக்கம் முன்பெல்லாம் கிடையாது.

ஆனால் இப்போது அதை செய்ய தொடங்கி உள்ளனர். இது போல் படங்களை ‘ரீமேக்’ செய்கிறவர்கள் அதன் கதைக்கான உரிமையாரிடம் இருக்கிறதோ அவரை அணுகி வாங்கிக் கொள்கின்றனர். படத்தின் இயக்குனருக்கு பணத்தை செட்டில் செய்யும் போது கதைக்கான உரிமையை எழுதி வாங்கிக் கொள்ளும் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள். இன்று போய் நாளை வா படத்தை பொறுத்த வரை சட்டப்படி உறுதிப்படுத்திய பிறகே நான் வாங்கினேன். இதில் பெரிய அளவில் பணம் கைமாறியுள்ளதாக பாக்யராஜ் நினைக்கிறார். அது தவறு.

யாரையும் ஏமாற்றும் எண்ணம் எதுவும் கிடையாது. அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்தும் நான் வரவில்லை. இந்த பிரச்சினையில் என்னை இழுத்தால் பாக்யராஜ் மீது வழக்கு போடுவேன்.

இவ்வாறு புஷ்பா கந்தசாமி கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum