தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சக்கரத்தாழ்வார் அருள்தரும் மாசுரம்

Go down

சக்கரத்தாழ்வார் அருள்தரும் மாசுரம் Empty சக்கரத்தாழ்வார் அருள்தரும் மாசுரம்

Post  meenu Thu Mar 28, 2013 5:11 pm


`ஆழியெழி' என்னும் பாசுரத்தைப் பாராயணம் செய்து வந்தால் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரின் பரிபூர்ண அருள் வந்து சித்திக்கும் என்று கூறப்படுகின்றது. அந்தப் பாசுரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

அழியெழ சங்கும் வில்லுமெழ திசை
வாழியெழத் தண்டும் வாளுமெழ அண்டம்
மோழையெழ முடிபாதமெழ அப்பன்
ஊழியெழ உலகங் கொண்டாவாறே
ஆறுமலைக்கு எதிர்ந்தோடு மொலி அர
வூறு சுலால் மலை தேய்க்குமொலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்றவொலி அப்பன்
சாறுபட அமுதங்கொண்ட நான்றே
நான்றில ஏழ்மண்ணும் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ்மலை தானாத்தவே பின்னும்
ஊன்றியிடந்து யெற்றில் கொண்ட நாளே
நாளுமெழ நிலநபருமெழ விண்ணும்
கோளுமேழ எரிகாலுமெழ மலை
தாளுமெழச் சுடர்தானுமெழ அப்பன்
ஊளியெழ உலகமுண்ட வூணே
ஊணுடை மல்லர் தனதந்தவொளி மன்னர்
ஆணுடைச் சேனை நடுங்குமொலி விண்ணுன்
ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட வொலி அப்பன்
காணுடைப் பாரதம் கையறை போழ்தே.
போழ்து மெலிந்து புன்செக்கரில் வான்திசை
சூழுமெழுந்து உதிரப்புனலாமலை
கீழ்து பிளந்த சிங்கமெத்ததால்
ஆழ்துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே
மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் இன
நூறு பிணம் மலைபோல் புரள கடல்
ஆறுமடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறுபட இலங்கை செற்ற நேரே.
நேர் சரிந்தான் கொடிக்கோழிக் கொண்டான்பின்னும்
நேர்சரிந்தான் எரியுமனலோன் பின்னும்
நேர் சரிந்தான் மூக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர் கரிவாணன் திண்டோன் கொண்டவன்றே
அன்று மண்நீரெரிகால் விண்மலைமுதல்
அன்று சுடரிரண்டு பிறவும் பின்னும்
அன்று மறையுயிர் தேவும் மற்றும் அப்பன்
அன்று முதல் உலகம் செய்ததுமே
மேய் நிரை கீழ்புக மாபுரள சுனை
வாய்நிறை நீர் பிளறிச் சொரிய இன
ஆநிரைபாடி அங்கே யொடுங்க அப்பன்
தீமழை காத்துக் குன்றமெடுத்தானே
குன்றமெடுத்த பிரான் அடியாரோடும்
ஒன்றிநின்ற சடகோபனுரைசெயல்
நன்று புனைந்த ஓராயிரத்துள்ளினவ
வென்றி தரும் பத்தும் மேவிக்கற் பார்க்கே
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum