தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருவண்ணாமலை: கிரிவல கிழமையும் - பலன்களும்

Go down

திருவண்ணாமலை: கிரிவல கிழமையும் - பலன்களும் Empty திருவண்ணாமலை: கிரிவல கிழமையும் - பலன்களும்

Post  amma Fri Jan 11, 2013 1:27 pm


திருவண்ணாமலை: கிரிவல கிழமையும் - பலன்களும்

* ஞாயிற்றுக்கிழமை : மனம், மொழி, மெய் சுத்தியுடன் நீராடி எந்த ஒரு சிந்தனையும் இன்றி நிர்மலமாய் மலையை வலம் வந்து தம்மால் இயன்ற தான தர்மங்களைச் செய்தவர்கள் சூரிய மண்டலத்தைப் பிளந்து சிவபதத்தைத் தமக்குரிய இடமாகச் சேர்த்துக் கொள்வர் என்று கூறப்படுகிறது.

* திங்கட்கிழமை : சூரியோதத்திற்கு முன்பாக நீராடி ஈர உடையுடன் இம்மலையை வலம் வருவதால் தேவேந்திரனைப் போன்று ஏழு உலகினையும் ஆளும் பலனை அடையலாம்.

* செவ்வாய்க்கிழமை : தூய நீரால் நீராடி எவருடனும் எதுவும் வாய் பேசிடாமல் தம் சித்தத்தை சிவத்தினடத்தே வைத்து இம்மலையை வலம் வந்தால் தங்கள் வறுமை மற்றும் சங்கிலித் தொடர் போல் தொடர்ந்திடும் ஏழு பிறவிகளையும் விட்டு நீங்கிடலாம்

* புதன்கிழமை : இந்நாளில் நீராடி இம் மலையை வலம் வந்தால் நான்கு வேதங்களையும் ஆறு சாஸ்திரங்களையும் அறுபத்து நான்கு கலைகளையும் கற்றுத் தெளிந்து முக்தியை நெருங்கலாம்.

* வியாழக்கிழமை : இந்நாளில் மலையை வலம் வருபவர்கள் மும்மூர்த்திகளும் புகழும்படியான - தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் மேலான - நிலையை அடைவார்கள்.

* வெள்ளிக்கிழமை : இக்கிழமையில் நீராடி மலையை வலம் வந்தால் விஷ்ணு பதத்தை அடைந்திடுவார்கள்.

* சனிக்கிழமை : இந்நாளில் சூரிய உதயத்தில் நீராடி மலையை வலம் வந்தால் நவக்கிரகங்கள் அளித்திடும் நற்பலன்கள் அனைத்தையும் பெறலாம்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum